அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளார் நியமனம்…!!தேர்தலுக்கு தயாராகிறதா…அதிமுக..??

Default Image

தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் விரைவில் இடைதேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for ELECTION OPS -EPS

மேலும் இந்த 20 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளான திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இந்த தொகுதிகள் முன்னாள் திமுக தலைவரும் அத்தொகுதியின் எம்.எல்.ஏவான கருணாநிதி உடல்நலக்குறைவால் காலமானார் இதனை தொடர்ந்து அத்தொகுதியில் எம்.எல்.ஏ பதவி காலியானது.இதனை போலவே திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே போஸ் மரடைப்பால் உயிரிழந்தார் இதனால் அத்தொகுதியும் காலியானது.

இந்த 2 தொகுதிகளை தவிர மற்ற 18 தொகுதிகளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததன் காரணமாக அந்த தொகுதிகளும் காலியானது ஆக மொத்தம் 20 தொகுதிகளும் காலியாக உள்ள நிலையில் விரைவில் இடைதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்களும்,நீதிமன்றங்களும் வலியுறுத்தி வரும் நிலையில் அரசிற்கு தனது பெரும்பாண்மையை நீருபிக்க இந்த தேர்தல் முக்கியமாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலை இன்னும் உற்று நோக்கி காத்து கொண்டிருக்கிறது எதிர்கட்சிகள் இந்நிலையில் தான் தனது தேர்தல் நகர்வாக அதிமுக அதன் அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம்  செய்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

Image result for ELECTION TAMILNADU

இதிலிருந்து அதிமுக தனது இடைதேர்தல் நகர்வை நோக்கி நகர்கிறது என்பது தெரிகிறது.இந்த தேர்தல் அரசியல் வட்டாரத்தில் முக்கிய தேர்தலாக கருதப்படுகிறது.

Image result for ELECTION OPS -EPS

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்