அதிமுக தான் மின்திட்டங்களை விரைந்து நிறைவேற்றியது !
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தமிழ்நாட்டில் மின்சாரத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது அதிமுக அரசு தான் என்று தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், கடந்த திமுக ஆட்சியின் போது துவங்கப்பட்ட மின்திட்டங்களை தான் தற்போது வரையில் அதிமுக அரசு தொடர்ந்து வருவதாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்தப்பினனர் அமைக்கப்பட்ட புதிய மின் திட்டப்பணிகள் எந்த அளவில் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, கடந்த திமுக ஆட்சியில் 30 சதவீத பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் ஓராண்டுக்குள் 70 சதவீத பணிகள் அனைத்தையும் விரைவுபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்றார். மேலும் தற்போது நடைபெற்று வரும் சென்னை எண்ணூர் அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு மின் திட்டங்கள் அனைத்தும் 2021-க்குள் முடிக்கப்படும் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.