கடும் அமளியால் கடந்த 5-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் 11 நாட்களும் முடங்கியுள்ளது.அ.தி.மு.க எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபடுகின்றனர். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆந்திர மாநில எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர்.
இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால், அவை சுமூகமாக நடக்காத நிலையில், இந்த நோட்டீஸை விவாதிக்க முடியாது என சபாநாயகர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவையை முடக்குவதாக சமாஜ்வாடி கட்சி எம்.பி ராம்கோபால் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அ.தி.மு.க அவையை முடக்குவதாகவும், மத்திய அரசை காப்பாற்ற அ.தி.மு.க. நாடகமாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை அ.தி.மு.க மறுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வாக்குறுதி அளிக்கப்படும் வரை அவையை நடத்த விட மாட்டோம் என அ.தி.மு.க எம்.பி.க்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…