அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி, மான் மற்றும் புலி நட்பாக பழகிய கதை ஒன்றை கூறி காவிரி விவகாரத்தில் பாஜகவும், அதிமுகவும் நட்பாக உள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த கதை யாருக்கு பொருந்தும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருவதையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.