அதிமுக எம்.எல்.ஏக்களை உயிர்பலி வாங்கும் திருப்பரங்குன்றம் தொகுதி …!மாரடைப்பால் காலமானார் அதிமுக எம்.எல்.ஏ!
நள்ளிரவில் திடீரென மாரடைப்பால் காலமானார் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ்.
ஏ.கே.போஸ் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஆவார்.இவருக்கு வயது 69 ஆகும்.ஜெய்ஹிந்து புரம் ஜீவா நகரில் வசித்து வருகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு மதுரையில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகண்டார்.
பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட எம்.எல்.ஏ இறந்து விட்டதால் அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் மூன்றாவது முறையாக எம்எல்ஏவானார். பின்னர் அவர் நேற்று இரவு ஏற்பட்ட மாரடைப்பில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட இரண்டாவது எம்.எல்.ஏ வும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.