அதிமுக அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம்!தினகரன் தரப்பு வாதம்
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் நேற்று காலை விசாரணையை நடைபெற்றது.
இதேபோல் இன்றும் 3ஆவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் 2ஆம் நாள் வாதங்கள் தொடங்கியது. தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தரப்பில்2வது நாளாக இன்று மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மற்றொரு மூத்த வழக்கறிஞரான மோகன் பராசரன் வாதிட்டு வருகின்றனர்.இந்த விசாரணையில் டிடிவி தரப்பு வாதத்தில்,முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டாலும் அதிமுக அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம். எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுவது தவறு என்று வாதிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.