அதிமுக – அமமுக பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக எளிதில் வெற்றிபெறும்…!தினகரன் அணி பரபரப்பு தகவல்
அதிமுக – அமமுக பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக எளிதில் வெற்றிபெற வழிவகை செய்துவிடக்கூடாது
என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், நாங்கள் அதிமுகவிற்கு வருகிறோம், நாங்கள் வெற்றி பெற்றால் அதிமுகவினர், அமமுக-விற்கு வரட்டும்.
அதிமுக – அமமுக பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக எளிதில் வெற்றிபெற வழிவகை செய்துவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.