அதிமுக அதுக்கு கூட பாஜக சொல்வதை அப்படி கேட்டு நடக்கின்றது!குஷ்பூ

Default Image

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ ,தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் பாஜக சொல்வதை அதிமுக அப்படியே கேட்டு நடப்பது தான், என குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, “திமுக – காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கருத்திற்கும், வழக்கறிஞர் பராசரன் கருத்திற்கும் தான் வேறுபாடு இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தவறு செய்ததாக காங்கிரஸ் எப்போதும் கூறாது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மை கண்டிப்பாகத் தேவை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் தலைமை நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தது. லோயா மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம், செலமேஷ்வர் புகார், ஆகியவற்றால் தான் காங்கிரஸ் தீபக் மிஸ்ராவை நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தது” என கூறினார்.

ஜனநாயகத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறிய அவர், காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் சுற்றுலா வருமானம் பெருமளவு குறைந்ததாக ஜெட்லி கூறுகிறார்; பணத்தை தான் நிதியமைச்சர் பார்க்கிறார் அதை குற்றமாக பார்க்கவில்லை. பெண் பத்திரிகையாளர் பற்றிய எஸ். வி சேகர் கருத்து ஆச்சிரியமளிக்கிறது. அதற்காக அவர் வருத்தம் தெரிவித்து இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்