அதிமுகவை பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பின்னர் டிடிவி தினகரன் அணியில் இணைந்து தற்போது இந்த இரு கட்சிகளிலும் இருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ள செந்தில்பாலாஜியை இரு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவித்த அவர் அதிமுகவைப் பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது.மேலும் செந்தில்பாலாஜி தன் சட்டையை மாற்றுவது போல 5 முறை கட்சிகளை மாற்றி இருப்பதாகவும் தன் பதவி சுகத்துக்காக கட்சி தாவியுள்ளார் அவரை அடையாளம் காட்டிய அதிமுகவுக்கும் ,அவரை நம்பி வந்த அமமுக நிர்வாகிகளுக்கும் அவர் துரோகம் செய்துள்ளார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…