அதிமுக குறித்து விமர்சித்த எனது நாக்கையும் அவர்கள் துண்டிப்பார்களா என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று அதிமுக அரசு சார்பில் இலங்கை அரசுக்கு போரின்போது உதவி செய்ததாகக் கூறி காங்கிரஸ்- தி.மு.க கூட்டணிக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றது.
தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அதிமுக அரசைப்பற்றி யாராவது தவறாகப் பேசினால் அவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று ஆவேசமாக பேசினார்.மேலும் திமுக தான் தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழலை அறிமுகப்படுத்தியது.
நாக்கை அறுத்துவிடுவேன் என்று வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதற்கு பாஜக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சு குறித்து கூறுகையில், அதிமுக அரசு குறித்து விமர்சனம் செய்த எனது நாக்கையும் அவர்கள் துண்டிப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…