அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுகதான்! நாடாளுமன்ற தேர்தல் வேலை தொடங்கிவிட்டது..! அமைச்சர் செல்லூர் ராஜு
அதிமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், அதிமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது. அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுகதான். வாக்காளர்கள் தான் எஜமானர்கள் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்.அதேபோல் தினகரன் கட்சியை ஒரு அமைப்பாகவே நாங்கள் கருதவில்லை என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.