ரஜினியின் அரசியல் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர்,அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும்? நான் ஏதாவது பேசினால் உடனே விவாதமாகிவிடுகிறது. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஊடக நிருபர் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு தலை சுற்றிவிட்டது. நைஸ் நைஸ் என்றேன்.
நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை. அரசியலுக்கு பணத்துக்காக, புகழுக்காக வரப் போவதில்லை. பதவிக்காக என்றால் 1996லேயே வந்திருப்பேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை வரவில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படி வந்தால் நான் ஆன்மிகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.
அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்துவிட்டது. ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் முடிவெடுக்கவில்லையென்றால் எனக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும்.
சாதி,மத, பேதமற்ற ஆன்மிக அரசியல் செய்வதே என் இலக்கு. இது சாதாரண விஷயமில்லை. ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று ஆட்சி அமைப்பது சாதாரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்களைக் கண்காணிக்கும் பிரதிநிதிதான் நான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து செயல்திட்டங்கள் வகுப்போம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் பதவி விலகுவோம். என் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு.தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்றும் பேசினார்.
ஆனால் நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
ஆனால் கமலுக்கு முன்பு நடிகர் ரஜினிதான் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்தார்.ஆனால் ரஜினியை பின்னுக்குத்தள்ளி கட்சியும் ஆரம்பித்தார்.ஆனால் தற்போது வரை ரஜினி வெறும் பேச்சாக மட்டுமே கூறிவருகிறார்.
பின்னர் ரஜினியின் அரசியல் குறித்து அதிமுக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்மாஃபா .பாண்டியராஜன் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் ,ரஜினியின் கட்சியில் சில குளறுபடிகள் உள்ளது.அதனால் கட்சியில் சிலபேரை வெளியே அனுப்புகிறார்.தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்று ரஜினி கூறியது தான் அவருடைய கொள்கை நிலைப்பாடு ஆகும்.இதன் அர்த்தம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆகும் .மேலும் அவர் எங்களுடன் வந்து சேரலாம் என்றும் தெரிவித்தார்.
தற்போது இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து ஒன்றை தெரிவித்த்துள்ளார்.
ரஜினிக்கு அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க இடமில்லை. யாராக இருந்தாலும் அதிமுகவில் தொண்டராக இணைந்துதான் படிப்படியாக முன்னேற முடியும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…