அதிமுகவில் சேரத்துடிக்கும் தினகரன் அணியின் முக்கியப்புள்ளி …!அதிமுகவில் ரகசிய தூது …!அதிமுக அமைச்சர் பகீர் தகவல்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார்.
இதேபோல் சமீபத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றால் நாங்கள்(தினகரன் அணி) அதிமுகவுடன் இணையத் தயார். நாங்கள் வெற்றி பெற்றால் அவர்கள் இணையத் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் கூறியுள்ளார்.தூத்துக்குடியில் அவர் கூறுகையில், தினகரனின் ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேர தூது விட்டுக் கொண்டிருக்கிறார்.சரியான பதில் அதிமுகவில் இருந்து வராததால், தங்கதமிழ்செல்வன் சரியான வழியை தேடிக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.