அதிமுகவில் உள்ள 10 எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சி அமைத்திருக்கலாம்! ஸ்டாலின்
ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவை தான், மக்கள், ஆளும் கட்சியாக நினைப்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவில் உள்ள 10 எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சி அமைத்திருக்கலாம் என்றும், ஆனால் அப்படி செய்திருந்தால் மக்கள் திமுகவை மதிக்க மாட்டார்கள் எனக் கூறினார். வெறும் வாதத்திற்காக மட்டுமே இவ்வாறு கூறியதாக அவர் சொன்னதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.