அதிசய கிராமம் : காதுகளை வளர்க்கும் ஊர் மக்கள்….!!

Published by
Dinasuvadu desk

ஒரு சில கிராமங்களில், நேர்த்திக்கடனுக்காக பூஜை செய்யும் சாமியாடிகள் ஒன்றிரண்டு பேர் காது வளர்ப்பார்கள். ஆனால், தாங்கள் வணங்கும் தெய்வத்திற்காக, ஒரு கிராமமே காது வளர்க்கும் வினோதத்தினை  எஸ்.கோவில்பட்டியில் காணலாம்.

Image result for காதுகளை வளர்க்கும்சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள எஸ்.கோவில்பட்டி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த குக்கிராமம்.சுமார் 650 குடும்பங்களை க் கொண்ட இந்த எஸ்.கோவில்பட்டி கிராமத்திற்குள் நுழைந்தால், எதிர்படும் அத்தனை ஆண்களும் வயது வித்தியாசமின்றி “செகுட்டு ஐயனாருக்காக” (செவிட்டு ஐயனார்) காதுகளை வளர்த்திருந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்திருக்கிறது செகுட்டு ஐயனார் கோவில். செடி, கொடிகளும், மரங்களும் மண்டி கிடக்கும் இந்த கோயில் அருகிலுள்ள கிராம மக்களால் ‘செடிக்கோயில்’ என அழைக்கப்படுவதும் உண்டு. பொதுவாக கிராமங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் தான் ஐயனார் கோவில் இருப்பதுண்டு. இங்கு, ஊருக்கு நடுவில் அமைந்திருக்கிறது இந்த கோவில்.
வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த விவசாயி முதல், களத்து மேட்டில் கதையளந்துக் கொண்டிருந்த அனைத்து ஆண்களும் காதுகளை துளையிட்டு, நீளவாக்கில் வளர்த்திருந்தனர். இதுப் பற்றி ஊர் மக்களிடம் கேட்டால் ” ” தெற்குப் பக்கமிருந்து மான் தேடி வந்தப்ப, எங்களுடைய முன்னோர் ஒய்யப்பன் கண்ணில் பட்டது தான் இந்த ஐயனார். ஒரு பஞ்சாயத்து விவகாரத்தில்,”கண்ணு குருடு, காது செவிடா” என இந்த ஐயனாரைப் பார்த்து கேட்டாக. கோபத்துல, ஐயனாரு சாபம் விட, மக்களுக்கு காதும் கேட்கல..! கண்ணும் கேட்கல..! தப்பை ஒத்துக்கிட்டு அவரிடம் கையை கட்டி நிக்க, ஐயனாரு சாபத்தை நிவர்த்தி செஞ்சு ஆசிர்வதிச்சாரு. அவருக்கு பிடிக்கும் என அன்னையிலிருந்து எங்க முன்னோர்கள் காது வளர்க்க ஆரம்பிச்சு, ஐயனாருக்கு சேவை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த ஊரில் காது வளர்க்காதவங்க யாரையும் பார்க்க முடியாது. அது போல்., இங்கு பிறக்கிற எந்த ஆண்குழந்தைக்கும் பொதுவான பேரு ஒய்யப்பன் தான். அதுக்கப்புறம் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி, எந்த பேரு வேண்டுமானாலும் வைச்சுக்கலாம். ஆனால்.  ஆம்பிளைக எல்லோரும் வந்து கட்டாயம் இங்க வந்து பூஜை வைக்கனும். புரவி தூக்கனும்.” என செகுட்டு ஐயனாரின் வரலாறையும், காது வளர்க்கும் கதையைக் ஊர் மக்கள் சொல்கின்றனர்.

ஆண்கள் அத்தனை பேரும் காது வளர்க்க,  ” முன்பெல்லாம் நாங்களும் ஐயனுக்காகக் காது வளர்ப்போம். தோடு போட முடியாது. அதுக்குப் பதிலாக காதின் மேற்புறம் புல்லாக்குப் போடுவோம். பொண்ணுகள் இங்க இருந்துட்டால் பரவாயில்லை. வெளியில் கட்டிக்கொடுத்தால் சங்கடம் தானே.! அதனால், இப்ப பெண் பிள்ளைகளுக்குக் காது வளர்ப்பதில்லை. பழைய ஆளுக மட்டும் தான் காது வளர்த்திருப்போம்.” என்கிறார்கள் அவ்வூர் பெண்கள்.

“ஆண்குழந்தைப் பிறந்த ஆறாவது மாசத்திலேயே காது குத்திடுவோம். முதலில் சின்ன இரும்பு வளையத்தை மாட்டிவிடுவோம். அப்புறம் 6 மாசம் கழிச்சு ஈயத்திலான உலோக வளையத்தை மாட்டிவிடுவோம். அது எடை தாங்காமல், காதை கீழே இழுத்து கொண்டு வந்து விட்டுவிடும். குறைந்தப் பட்சம் 1 வருஷமாவது காதில் ஈய வளையம் இருக்கனும். அதற்கப்புறம் எங்களுக்கு இருக்கிற மாதிரி வந்துவிடும். அப்பல்லாம், நாங்க காதில் போட்டுகிட்டது இரும்பு வளையங்களை.” எப்படி காது வளர்ப்பது என சொல்கிறார்கள் ஊர் மக்கள்”நாங்க இப்படி மாறிய பிறகு அந்த ஐயனும் எங்களுக்கு எந்த குறையையும் வைக்கலை.” என்று சொல்லி அனைவரையும் வியப்படைய வைக்கிறார்கள் கிராம மக்கள்..
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? அப்பாவு கொடுத்த அப்டேட்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…

9 minutes ago

முதல் நாளிலேயே தொடர் அமளி! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…

11 minutes ago

“நான் பக்கா சென்னை பையன்”… புஷ்பா பட ப்ரோமோஷனில் அல்லு அர்ஜுன் கலகல.!

சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2'  திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…

19 minutes ago

“ராமதாஸுக்கு வேற வேலை இல்லை., பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!” மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…

27 minutes ago

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…

1 hour ago

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…

1 hour ago