அதிகாலை 5 மணிக்கே கோலமிட்டு…காவல்நிலையத்தை அலங்கரித்து அசத்திய மகளிர் காவல்
- உற்சாக பொங்க கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாள் மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டுடன் ஆரவாரம்
- கோலமிட்டு காவல்நிலையத்தை அலங்கரித்து அனைத்து மகளிர் நிலைய பெண் காவலர்கள் அசத்தல்.
தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கிய நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பொங்கலை கொண்டாடுவதற்காக எவ்வாறு நம் வீடுகளில் அதிகாலை எழுந்து வண்ணக்கோலமிட்டு மகிழ்ச்சியை இல்லத்திற்கு வரவழைப்பமோ அதனைப் போலவே இங்கு அதிகாலை 5 மணிக்கே கோலமிட்டு மகளிர் பெண் காவலர்கள் அசத்தி உள்ளனர் , மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி என்ற ஊரில் இன்று பொங்கலை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கே காவல்நிலையத்திற்கு வந்து கோலமிட்டு காவல்நிலையத்தை அலங்கரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் தைப்பொங்கலை காவல் நிலையத்தில் கொண்டாடியுள்ளனர். எழுந்இந்தக் கொண்டாட்டம் அந்த ஊர் மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.