அண்ணா பல்கலைக்கழக முறைகேடு:பதிவாளர் கணேசன் அதிரடி மாற்றம்…!துனைவேந்தர் அதிரடி உத்தரவு

Default Image

அண்ணா பல்கலைகழகத்தின்  பொறுப்பு பதிவாளராக ஜெ.குமாரை நியமித்து துனைவேந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த  ஆகஸ்ட் 1 ஆம் தேதி  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் அனைத்து பொறுப்புகளையும் கண்காணித்து வந்துள்ளார்.
Related image

ஒரு ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் போலீஸ் பெறப்பட்டதாக விசாரணையில் அதிர்ச்சி தெரியவந்துள்ளது. மேலும் பலர் இதில் சிக்குவார்கள் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.பின்னர்  திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் விஜயகுமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 
பின்னர்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக  விசாரணை நடத்தினர்.
Image result for பதிவாளர் கணேசன்
இதில் ஒரு மாணவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் மாணவர் ஒருவர் ஐந்து மதிப்பெண்கள் பெற்ற நிலையில் இரண்டுமுறை மறுமதிப்பீடு செய்ததுள்ளார்.இதன் மூலம் முதலாவது மதிப்பீட்டில் கூடுதலாக 40 மதிப்பெண்களும் ,இரண்டாவது மறுமதிப்பீட்டில் 32 மதிப்பெண்களும் சேர்த்து 77 மதிப்பெண்களை விதிகளை மீறி பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.மேலும் 32 மதிப்பெண்களை பெற்றிருப்பது தெரியவந்தது. இதேபோன்று 70 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம் இதுபோல் கோடிக்கணக்கில் பணம்  பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
பின் உயர்நீதிமன்றத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் அண்ணா பல்கலைகழக பேராசிரியை உமா, உதவிப்பேராசிரியர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.சென்னை உயர்நீதிமன்றம் வரும் 14ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று காலை  அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் பற்றி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு பகீர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் பதிவாளர் கணேசனை பதவியில் இருந்து நீக்க அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. பல்கலைக்கழக முறைகேடுகள் அனைத்திற்கும் பதிவாளர் கணேசன்தான் காரணம் என குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
Image result for அண்ணா பல்கலை முறைக்கேடு
இந்நிலையில் விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் சென்னை அண்ணா பல்கலைகழக  பதிவாளராக இருந்த கணேசனுக்கு தொடர்பு என ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அவரை மாற்றினார் துணைவேந்தர் சூரப்பா. அண்ணா பல்கலைகழகத்தின்  பொறுப்பு பதிவாளராக ஜெ.குமாரை நியமித்து துனைவேந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்