சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக துணை வேந்தராக பணியாற்றிய டாக்டர் எஸ். மணியன் கடந்த மே மாதம் 27 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனால் புதிதாக துணை வேந்தரை நியமிக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்தகுழுவினர் புதிய துணைவேந்தரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அம்பேத்கர் ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.எஸ்.குமார், நீதிவளவன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். பல்கலைக்கழக முறைகேடுகளை சரிசெய்ய தமிழக அரசு நிர்வாகஅதிகாரியை அமைத்தது. அதன் பிறகு துணைவேந்தராக டாக்டர் மணியன் நியமிக்கப்பட்டு அவரது பதவிக்காலமும் முடிந்து விட்டது. இந்நிலையில், முந்தையதுணை வேந்தர் மணியனே மீண்டும் துணை வேந்தராக வருவதற்காகன முயற்சிகளை எடுத்து வருவதாக அறிகிறோம். மீண்டும் அவர் வந்தால் பல்கலைக்கழகத்தில் ஒன்றுமே இருக்காது. அரசு சொன்ன எதையுமே அவர் பணிக் காலத்தில் செய்யவில்லை. பணி ஓய்வு பெறும் நிலையிலும் விதிகளை மீறி பல்்வேறுஉத்தரவுகளைஅவர் பிறப்பித்துள்ளார். இதைதட்டிக் கேட்ட ஆசிரியர்சங்கங்களை பிரித்தாளுகிறார்கள்.
பல்கலைக்கழகத்தி லிருந்து தமிழக அரசுப் பணியிடங்களுக்கு செல்லும் ஊழியர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அருகிலுள்ள மாவட்டத்திலும், பணம் கொடுக்காமல் கேள்விகேட்கும்ஊழியர்களை தமிழகத்தின் கடைகோடியில் தூக்கியடித்துள்ளனர். ஊழியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு மூலம் நடக்கவேண்டும் என்று பல முறைகோரிக்கைவிடுத்தோம். அதனை ஏற்காமல் பணமே குறிக்கோளக செயல்பட்டவர் துணை வேந்தர் மணியன். தற்போது, பதிவாளராக உள்ள ஆறுமுகமும், துணை வேந்தர் மணியனும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த இருவருமே துணை வேந்தர் பதவிக்கு போட்டிபோடுகிறார்கள். எனவே ஊழல் வாதிகளை துணை வேந்தராக நியமிக்கக் கூடாது. தொலை தூரக் கல்வி மையத்தின் பாடப்பிரிவுகளை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தனியாருக்கும் உறவினர்களுக்கும் தாரை வார்த்து, நிதி இழப்பை
ஏற்படுத்தியவர்கள்தான் இந்த இருவரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…