அண்ணாமலை பல்கலையில் சிறப்பு, தொடர்பு அலுவலர்களுக்கு சம்பளக் குறைப்பு…!! நிதிபற்றாக்குறை என நிர்வாகம் அறிவிப்பு…!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 800க்கும் மேற்பட்ட சிறப்பு அலுவலர் மற்றும் தொடர்பு அலுவலர்களுக்கு சம்பள குறைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள தொலைதூர கல்வி இயக்கக படிப்பு மையங்களில் 800க்கும் மேற்பட்ட சிறப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக் கழக நிதி நெருக்கடி காராணமாக அடிப்படை சம்பளம் 9 ஆயிரத்து 300 ரூபாய் என நிர்ணயம் செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்