அட சும்மா இருங்கப்பா..ஸ்டாலின் அண்ணாச்சிக்கு..அழகிரி என்ற பெயர் ஆகவே ஆகதப்பா..! அமைச்சர் கிண்டல்

Default Image
  • திமுக -காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ..! பரவிய தகவலைத் தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு
  • திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழகிரி என்ற பெயர் ஆகது என்று அமைச்சர் கிண்டல்

 

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டிட்ட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.இந்நிலையில் அன்மைக்காலமாக திமுக கூட்டணியில் இருந்து வரும் கட்சி திமுக மீது தனது அதிருப்திகளை தெரிவித்து வந்தது இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வந்தனர்.அதற்கு காரணம் காங்கிரஸ் தலைவர்  உள்ளாட்சி தேர்தல் குறித்து வெளியிட்ட அறிக்கை அந்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்கள் ஒதுக்க வில்லை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளில் காங்கிரஸ் போட்டியிட திமுக எங்களுக்கு  ஒத்துழைப்பு தரவில்லை.திமுக தலைமையின்  இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.

திமுக மீது புகார் குண்டு மழை பொழிந்து அறிக்கையில் பொறிந்து தள்ளிய காங்.தலைவர்..பகீரங்க அறிக்கை

மேலும் 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில்  2 இடங்கள் மட்டும் திமுகவினால் வழங்கப் பட்டுள்ளது. மேலும் திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை என்று தனது அறிக்கையின் வழியாக ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருந்தார் காங்.தலைவர் கேஎஸ் அழகிரி.

Image result for கேஎஸ் அழகிரி ஸ்டாலின்

இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு கருத்து மோதல்கள் வெடிக்க தொடங்க நிலையில் தான் திமுக-காங்கிரஸ் கட்சியினுடைய முக்கிய தலைவர்கள் சிலர் மாறிமாறி தங்களது கருத்தை வெளிப்படுத்தினர் இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை காங்.தலைவர் கேஎஸ் அழகிரி நேரில் சந்தித்தார்.

Image result for கேஎஸ் அழகிரி ஸ்டாலின் சந்திப்பு

அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த யுகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.இந்த சந்திப்பு  குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த முறிவும் இல்லை ,மேலும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணித் தொடரும் என்று கூறினார்.

Image result for முக அழகிரி ஸ்டாலின் சந்திப்பு

அமைச்சரின் ட்விட்டர் பதிவு

இந்நிலையில் தான் திமுக-காங்கிரஸ்  கூட்டணி விவகாரம் தொடர்பாக தனது  ட்விட்டரில் பக்கத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மதுரை என்றாலும் சரி, கடலூர் என்றாலும் சரி. அழகிரி என்ற பெயரே  ஸ்டாலினுக்கு ஆகாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியையும் மறைமுகமாக குறிப்பிட்டு மு.க ஸ்டாலினை விமர்சித்து உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்