அடுத்த மாதம் கட்சி : பக்கா பிளானில் ரஜினி

Default Image

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? எப்போது வருவார்? இனி எதுக்கு வருகிறார்? என பலதரபட்ட கேள்விகள் தமிழக மக்களிடம் உள்ளது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தும். சிலர் ஆதாரவு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த அரசியல்வருகை பற்றிய செய்தி, 1996இல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிததிலிருந்தே தீயாய் பரவுகிறது. அண்மையில் அவர் தனது ரசிகர்களை அழைத்து சென்னையில் அவர் பேசிகையில், ‘சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள்’ என்றல்லாம்  கூறி தனது   வருகையை உறுதி செய்து வருகிறார் அவர்.

கோயம்புத்தூரில் ரஜினி ரசிகர் ஒருவரின் திருமணத்துக்கு வந்த ரஜினியின் சகோதரரும் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. எனவும் விரைவில் அது குறித்து அதிகாரபூர்வ தகவல் வரும் எனவும் கூறினார். மேலும் ரஜினிகாந்த் 2.O மற்றும் காலா படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களின் சூட்டிங் நிறைவடைந்து உள்ளது. அதன் பிறகு வேறு எந்த படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. அதலால் அவர் சீக்கிரமே தனது கட்சியின் பெயரை அறிவிப்பார் எனவும் தெரிகிறது.

அடுத்த மாதம் சென்னையில் விடுபட்ட மீதம் உள்ள 16 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து 6 நாட்கள் பேச உள்ளார். அதன் பிறகு கட்சி பெயரை அறிவிப்பார். கட்சி பெயரை அறிவித்த பிறகு கோடம்பாக்கத்தில் இருக்கும் அவரது ராகவேந்திரா மண்டபம் ரஜினியின் கட்சி அலுவலகமாக மாற்றப்படும் எனவும் தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்