உணவுப் பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு சாலையோரக் கடைகளில் தரமற்ற உணவு விற்கப்படுவதாக, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் இந்த எண்ணுக்கு 2 ஆயிரத்து 464 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையோரக் கடைகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தி தரமற்ற பொருட்களைக் கைப்பற்றி வருகின்றனர். தரமற்ற பிளாஸ்டிக் கப்புகள், தட்டுக்களில் உணவு பரிமாறப்பட்டதாக எழும் புகார்களின் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உணவு சார் தொழில் செய்வோரின் பட்டியல் பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள உணவுப் பாதுகாப்புத் துறையினர், தெருவோரக் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்து நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுவரை 77.4 சதவீத உணவு விற்பனையாளர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.
தரவுகளை சேகரிக்கும் அமைப்பாக மட்டுமின்றி விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக உணவுப் பாதுகாப்புத்துறை செயல்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதுகாப்பான உணவு பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…