அடித்து நொறுக்கிய கஜா……7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்..!!
அடித்து நொறுக்கிய கஜா……7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்
தமிழகத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கி கரையை கடந்த கஜா போகும் பொழுது தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் நாகையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டியில் கரையை கடந்தது கஜா இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், கஜா புயலானது இன்று காலை 11.30 மணிக்கு வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. புயலில் இருந்து ஒருபடி கீழிறங்கி தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
மேலும் கஜா புயல் காலை 11:30 மணியளிவில் வலு குறைந்து தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் வரும் 18ஆம் தேதி புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவே மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ,தஞ்சாவூர்,நீலகிரி,ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
மேலும் நவம்பர் 18 முதல் 20ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்.
DINASUVADU