அஞ்சா நெஞ்சன் அஞ்ச காரணம் என்ன ? குழப்பத்தில் தொண்டர்கள்..!!

Default Image

சென்னையில் இன்று அமைதி பேரணிக்கு பின் அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் சென்றது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது .

சென்னை ,

சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதி நோக்கி அமைதி பேரணி நடந்தி நடத்தினர்.பேரணி நடத்துவதற்கு முன்பு அதிரடியாக பேசிய முக.அழகிரி , விமர்சனம் செய்த முக.அழகிரி , குற்றச்சாட்டுகளை முன் வைத்த முக.அழகிரி மெரினா பேரணி முடிந்து எவ்விதமான அறிக்கையும் வெளியிடாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்துள்ளது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.பெரிய எதிர்பார்ப்புடன்  இன்று நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருக்கின்ற்றது.

இன்று காலை மெரினாவில் பேரணியின் முடிவில் அண்ணா, கருணாநிதி சமாதியில் அழகிரி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. இது முழுக்க முழுக்க அஞ்சலி பேரணி. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றார். இது தொண்டர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முக அழகிரி இப்படி பேசுவார் என்று தொண்டர்கள் உட்பட யாரும் நினைக்கவில்லை.

இந்த பேரணி நடத்துவதால் கட்சியில் தொண்டர்கள் தன் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்த்தார் முக அழகிரி . ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களே அவரை வந்து சந்திக்கவில்லை. ஸ்டாலினால் நீக்கப்பட்டவர்கள் கூட அழகிரியை சந்திக்கவில்லை.பேரணி குறித்து முக அழகிரி நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் தொண்டர்கள் குறைவாக இருந்தனர். பேரணி குறித்தும் , அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முக.அழகிரி நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு தினமும் 5 முதல் 6 பேர் மட்டுமே அழகிரியை சந்தித்தனர்.

இன்று கூட அவரது பேரணிக்கு 7 ஆயிரம் பேர் மட்டுமே வந்து இருந்தனர். இன்று அழகிரி கனிமொழியை சந்திக்கவில்லை. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதற்கு கனிமொழி ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அப்போதே அழகிரி கனிமொழி உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.காரணம் அழகிரி, கட்சியில் தனக்கு முன்னைப்போல செல்வாக்கு இல்லை என்று உணர்ந்து திமுகவின் தலைவராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயார் என்று தெரிவித்தார். ஆனால் அதன்பின்பும் கூட திமுக தரப்பு அவரை கண்டுகொள்ளவில்லை. ஒருவரும் பேட்டி கூட இதை பற்றி அளிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.” மெரினாவில் ஓய்ந்தது முக.அழகிரி அலை ” 7,000 பேரை வைத்து என்ன செய்ய…!! .என்று அழகிரி ஆதரவாளர்களே பேச ஆரம்பித்து விட்டனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்