அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி…..அரசாணை வெளிட்டது தமிழக அரசு…..!!
தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்குவதற்கு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்போது, பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேர்வது குறைந்து வருகிறது. எனவே, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், அரசு நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடிகளில் வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்காக, வரும் கல்வி ஆண்டில் 7 கோடியே 73 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.