“அக்கா கணவருடன் தவறான உறவு” கண்டித்த கணவர் கொலை..!!
திருவள்ளூர் ,மாவட்டத்தில் கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சாகுல் அமீது (70) இவருக்கு மொத்தம் 3 மனைவிகள்.இதில் மூன்றாவது மனைவி ஜபருன்னிஷா (36) இந்நிலையில் இவரின் கணவர் தீடீரென இறந்து விட்டார்.அப்போது இறுதி சடங்குகள் செய்வதற்காக உறவினர்கள் , சொந்தபந்தங்கள் சாகுல் அமீது வீட்டுக்கு ஜபருன்னிஷா விடம் ஆறுதல் சொல்ல வந்தனர்.
அப்போது சாகுல் அமீது உடம்புகளில் காயங்கள் இருந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்து போலீசிடம் புகாரளித்தனர்.அப்போது அங்கெ வந்த காவல்துறை அவரின் மனைவி ஜபருன்னிஷா விடம் விசாரணை நடத்தினர்.அப்போது ஜபருன்னிஷா முன்னுக்கும் ,பின்னுக்கும் முரணான பதிலளித்தார்.
தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை நடத்திய பொது கணவனைக் கொன்றதாக அவரது மனைவி ஜபருன்னிஷா ஒப்புக்கொண்டார்.அப்போது ஜபருன்னிஷா அளித்த வாக்குமூலத்தில் என்னுடைய வீட்டுக்கு என்னுடைய அக்காவின் கணவர் உசேன் வந்து செல்வார்.அப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.அப்போது நாங்கள் தவறான உறவில் ஏற்பட்டோம் இதை சாகுல் கண்டித்தார்.அதனால் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்க முடியாமல் போனது எனவே நானும் , உசேனும் சேர்ந்து சாகுலை அடித்து கொலை செய்தோம் என்றார்.தற்போது காவல்துறை இருவரையும் கைது செய்துள்ளது.
DINASUVADU