கோவையில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் சென்னை சுங்கம்
அணியும், கேரள மாநில மின்சார வாரிய அணியும் வெற்றி பெற்றுள்ளது.
கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி வியாழனன்று (மே 31) நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நடைபெற்ற பெண்கள் இறுதிப்போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி விளையாடியது. மிகவும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த விளையாட்டில் 59 – 43 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கேரள மாநில மின்சார வாரிய அணி வெற்றி பெற்றது.
அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ஆண்கள் பிரிவில் வெற்றி
பெற்ற சென்னை சுங்கம் அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாமிடம் பெற்ற தில்லி இந்தியன் ரயில்வே அணிக்கு டாக்டர்.என்.மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது.
மேலும், பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கேரள மாநில
மின்சார வாரிய அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் சுழற்கோப்பை
யும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு, சிறந்த நம்பிக்கைக்கான விளையாட்டு வீராங்கனை விருது தமிழ்நாடு ஜூனியர் அணியைச் சேர்ந்த கிருத்திகாவிற்கு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஜி.தர்மராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு கூடைப்பந்து கழக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன்,
சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் மற்றும் கூடைப்பந்து கழகத் தலைவரும்
சி.ஆர்.ஐ குழுமங்களின், இணை நிர்வாக இயக்குநருமான ஜீ.செல்வராஜ் ஆகியோர்
கௌரவ விருந்தினராக கலந்துகொண்டனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…