புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம் இறுதிகட்டம்!
புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம், மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில், 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக, தலைமைச் செயலகம் அருகே கடற்கரை ஓரமாக 200 மீட்டர் நீளத்திற்கு, கருங்கற்கள் அடுக்கப்பட்டு, பின்னர் மணலைக் கொட்டி இடம் சமன் செய்யப்பட்டது.
தற்போது இரண்டாம் கட்ட பணியாக, தடுப்புச் சுவர்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் செயற்கை கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.