Puducherry Dengue: பரவும் டெங்கு..கல்லூரி மாணவி உயிரிழப்பு..! மருத்துவ அறிக்கையில் தகவல்.!
கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் என்பது பல இடங்களில் வெகுவாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் என்பது அதிகமாகியுள்ளது. இந்நிலையில், குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர் டெங்குவால் உயிரிழந்துள்ளார்.
கல்லூரி மாணவி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் மாணவி நோயில் இருந்து மீண்டு வரவில்லை. இந்நிலையில் மாணவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வெளியான மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், மாணவி டெங்கு நோய் காரணத்தால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மழைக்காலம் வர உள்ளதால் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்ஷன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த செப்-10ம் தேதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.