புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!
புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் குறித்த ஆயத்த பணிகளை தொடங்கியிருக்கிறார்.
நாடாளுமன்றதேர்தல் நடைபெறஉள்ளதை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, அக்கட்சியின் மாநில தலைவர்களை நியமித்துள்ளார். இதன் படி புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக சக்திசிங் கோகிலம், டெல்லி மற்றும் ஹரியானாவுக்கு தீபக் பாபரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.