கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.! டிவிட்டரில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை நெகிழ்ச்சி.!
புதுச்சேரி ஆளுநர் தமிழசை சௌந்தரராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.
தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநராகவும் பதவியில் இருப்பவர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன். இவர் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை சவுந்தராஜனுக்கு , பிரதமர் மோடி கடிதம் மூலம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதனை டிவிட்டரில் பகிர்ந்த தமிழிசை, இன்று உங்களது வாழ்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களின் 24 மணிநேர உழைப்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.
Fortunate to receive Warm birthday greetings from our Honb @PMOIndia Shri @narendramodi ji .Feeling immensely grateful & blessed to get your encouragement & guidance for serving our ‘Nation’ in your visionary path to future India. Your 24/7 hard work is our inspiration. pic.twitter.com/WILlLTzvFM
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) June 1, 2023