வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த தகராறில் கணவனை தாக்கிய சகோதர்கள்.பின்னர் இரண்டு வீட்டினரும் சமாதானம் அடைந்துள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து ஜெய ஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள அக்ரா மங்கலத்தில் வசித்து வந்தவர் ஜெய ஸ்ரீ ஆவார்.இவர் புதுச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அருண் ராஜ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாற இரு வீட்டினரின் சம்மதத்துடன் 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து […]
காரைக்கால் அமைச்சர் கமலக்கண்ணனின் அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்ப கேட்டுள்ளனர். அதற்கு அமுதசுரபி ஊழியர்கள் டீசல் நிரப்ப மறுத்துவிட்டார்கள். புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் இருப்பதால சகா பயணிகளுடன் அரசு பேருந்தில் தனக்கென டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணித்த நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்தது. புதுச்சேரி அரசு துறைகள் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்ப படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் […]
வீட்டிற்குள் இருந்து அழுகிய வாடை வந்ததால் சுந்தரத்தின் உறவினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர் ,அப்போது அழுகிய நிலையில் சடலம் கிடந்துள்ளது. இதன் காரணமாக கொலையா?இல்ல தற்கொலையா?என்ற எண்ணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. புதுச்சேரியில் உள்ள பாகூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் ஆவார்.இவர் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார்.இவரது மனைவி சுகந்தி ஆவார்.இவர்களுக்கு இரண்டு ஆண் ஆண்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடைபெற்று […]
பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு பிரித்தானியாவை சேர்ந்த மாணவன் சலவை இயந்திரத்தை பரிசளித்துள்ளார். மேலும் அவர் உருவாக்கிய சலவை இயந்திரம் ஈராக்கில் உள்ள அகதிகள் முகாமில் நிறுவப்பட உள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த நாவ் சாவ்னி என்ற மாணவர் பாத் பல்கலை கழகத்தில் மனிதாபிமானம் என்ற பிரிவில் பி.எஸ்.சி பயின்று வருகிறார்.இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திவ்யா என்ற பெண் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர் என்பதால் அவரிடம் பேசி வந்துள்ளார்.பின்னர் […]
புதுச்சேரி பல்கலைக்கழக 27-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். எந்தவொரு காரணம் இல்லாமல் தன்னை வெளியேற்றியதால் தங்க பதக்கத்தை ஏற்க மருத்துள்ளேன் என மாணவி ரஃபியா தெரிவித்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று […]
காரைக்காலில் உள்ள ஒரு வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல்துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. புதுச்சேரி யூனியனில் காரைக்கால் புறவழிச்சாலை தீன்ஸ் பார்க் பகுதியில் அருகே ஒரு வீட்டில் சட்ட விரோதமான போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கலால் மற்றும் காவல்துறையினர், அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையை […]
தனியார் மதுபானக் கடையில் மது வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மறுத்த மூன்று மர்ம நபர். புதுச்சேரியில் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய 3 ரௌடிகள், சிசிடிவி காட்சிகளின் மூலம் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி திருபுவனை, திருவண்டார்கோயில் கொத்தபுரிநத்தத்தில் தனியார் மதுபான கடை பார் வசதியுடன் அமைந்துள்ளது. ஞாயிற்றுகிழமை இரவு 3 பேர் மதுக்கடைக்கு வந்து பல்வேறு பிராண்ட் சரக்குகளை வாங்கி அருந்தினர். இறுதியில் பணம் தராமலேயே கடையைவிட்டு கிளம்ப முயற்சித்தனர். அவர்களிடம் பணம் கேட்ட போது […]
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் மசாஜ் செண்டரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 61 வயது மஞ்சுநாத் என்ற தொழிலதிபர் அடிக்கடி புதுவையில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனையடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் அவருக்கு நண்பரானார். இந்நிலையில், கடந்த சில […]
மதுர என்பவரின் ஸ்டூடியோவில் 3 ஆண்டுகளாக தனலட்சுமி வேலை செய்து வந்து உள்ளார். கடந்த ஜனவரி முதல் தனலட்சுமிக்கு பிரியாணி ,டீ ,காபி ஆகியவற்றில் அடிக்கடி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து தனலட்சுமி தந்தையிடம் கூறியுள்ளார்.பின்னர் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்த நிலையில் மதுர திருமணம் ஆனவர் என்பதால் தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் சுப்பையா நகரை சார்ந்தவர் தனலட்சுமி (31)இவர் +2 முடித்த இவர் மதுர […]
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாள்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தொடர்ந்து கன பெய்து வருவதால் சாலைகள் மற்றும் வீடுகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால் நாளை புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை […]
தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கிழக்கு திசையை காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்களில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. நாளையும், நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யவாய்ப்பு உண்டு. இன்று கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில் […]
தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.முன்னதாக தமிழகத்தில் உள்ள 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருந்தனர். திருவாரூர் , சென்னை ,காஞ்சிபுரம் ,புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்த நிலையில் தற்போதைய புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுர்ஜித் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து உயிரழந்ததுக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுவையில் ஆழ்த்துளை கிணறுகளை மூடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது .சுஜித்தின் இறப்பு நமக்கு அலட்சியம் என்னும் பழக்கம் நம்மை சூழ்ந்துள்ளதை உணர்த்தி விட்டு சென்றிருக்கிறது. இதனிடையே புதுச்சேரியில் பயனில்லாமல் கிடக்கும் ஆழ்த்துளை கிணறுகளை மூடாவிட்டால் நில உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது .சட்டங்கள் கடுமையானால் தான் நம்மிடத்தில் உள்ள இந்த அலட்சியம் போகும்.நம் வீட்டருகே உள்ள பயன்பாடற்ற ஆழ்த்துளை கிணறுகளை […]
புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் உள்ள 35 ஆயிரத்து 9 வாக்காளர்களில் 24 ஆயிரத்து 296 பேர் வாக்களித்தனர். இதனால் 69.44 சதவீத வாக்கு பதிவானது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரி காமராஜர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை மூன்று சுற்றுகளாக எண்ணப்பட்டன. மூன்று சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14,782வாக்குகளும் , என் […]
புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.8 மணி முதல் 8.30 வரை தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை உள்ளார். காங்கிரஸ் -3919 வாக்குகள் என்.ஆர் காங்கிரஸ்- 2092 வாக்குகள் நாம் தமிழர் -0 வாக்குகள்
புதுசேரியில் அரசியல் பிரமுகர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியம் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாகியுள்ளது. புதுச்சேரி, காலாபேட்டையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர் சந்திரசேகர் என்பவரை ஒரு கும்பல் நாட்டு வெடுக்குண்டு கொண்டு தாக்கியுள்ளனர். அதில் சாகவில்லை என்பதால் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவரை கொடூரமாக கொன்றுவிட்டனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியவிட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில், இன்று சட்டப்பேரவை நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே இலவச அரிசி பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், இந்த மசோதா தற்போது வரை நடைமுறைப்படுத்தமல் உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்தும் எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 4 ரூபாய் அதிகரித்தும், பால் விற்பனை விலை 6 ரூபாய்அதிகரிதும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் தற்போது புதுச்சேரியிலும் பால் கொள்முதல் விலையும் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையானது ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரித்தும், பால் விற்பனை விலையானது ஆறு ரூபாய் அதிகரித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விலையேற்றம் இன்று இரவு 12 மணி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாளை காலை இந்த விலையேற்றம் […]
கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது .இதனால் கடும் வெப்பத்தில் தவித்து மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது .