நிவர் புயல் காரணமாக விபத்துகளை தடுக்க தமிழக – புதுச்சேரி எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் சேதங்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல இடங்களில் நிவாரண பொருட்களுடன் தயாராக உள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் புதுப்பித்து எனும் இரு மாவட்டங்களையும் […]
நிவர் புயலானது இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்த நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. […]
5 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அடுத்துள்ள சாத்தமங்கலத்தில் சிலர் குடும்பத்துடன் வந்து அங்கேயே தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தங்கள் பெண்குழந்தைகளை கூட்டுவந்துள்ளனர். ஆனால், இந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சிலரின் பெண் குழந்தைகளை ஒரு கும்பல் வாத்து பண்ணையில் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அங்கு நேரில் சென்ற அதிகாரிகள் […]
காதலனிடம் கள்ளக்காதலன் பற்றி பெருமை பேசிய பெண்ணை கொலை செய்தவர் கைது. புதுச்சரி மாநிலத்தில் உள்ளதவழக்குப்பம் என்னும் பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியாகிய 48 வயதுடைய பூபாலனுக்கும் அந்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சாந்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக சாராயபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரித்து அதை விற்பனை செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கருது வேறுபாட்டால் சாந்தியை பிரிந்து பூபாலன் வேறு மாநிலத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். அவர் இங்கு […]
ஐந்தாம் கட்ட தளர்வாக புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பரவி வந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதிலும் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து துறை, தொழில்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு ஒவ்வொரு கட்டமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது புதுச்சேரியில் ஐந்தாம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக […]
புதுச்சேரியை சேர்ந்தவர் ஆன்லைன் ரம்மியில் 30 லட்சத்தை இழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். புதுச்சேரி கோர்க்காடு பகுதியை சேர்ந்த 38 வயதாகக்கூடிய விஜயகுமார் என்னும் தனியார் செல்போன் நிறுவன சிம்கார்டு மொத்த விற்பனையாளராக பணி புரியக்கூடிய இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளது. சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் கொரோனோ ஊரடங்கு காலத்தில் பொழுது போக்க வேறு எதுவும் இல்லாததால் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். இந்த விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை விட்டு விட்டு விட்டு […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த புதுச்சேரி காவல் ஆய்வாளர். புதுச்சேரி மாநிலத்திலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டேதான் இருக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சாதாரண மக்களை விட முன்கள பணியாளர்களாக செயல்படக்கூடிய மருத்துவர்கள் காவலர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றி வந்த சரவணன் என்பவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
நீட் விதிகளை புறக்கணித்த புதுச்சேரியின் 7 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கலந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் விதிமுறைகளை புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகள் புறக்கணித்து மாணவர்களை அனுமதித்துள்ளது. இந்நிலையில் நீட் விதிகளை புறக்கணித்து மருத்துவப் படிப்பில் மாணவர்களை அனுமதித்த புதுச்சேரியை சேர்ந்த 7 மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
புதுச்சேரியை காப்பாற்ற பாஜகவை ஓட ஓட விரட்ட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடுமையாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மத்திய அரசுக்கு விரோதமாகவும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு விரோதமாகவும் கண்டனம் தெரிவித்து […]
புதுச்சரி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவர் மணிகண்டன் என்பவர் நேற்று இரவு 11 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நெல்லித்தோப்பு மார்க்கெட் எதிரே வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து என அனைத்துமே தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு சுத்தம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. எட்டாம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 10, 12, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு அப்பள்ளிகள் நடைபெறும் […]
கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் நபருக்கு 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என கலெக்டர் அருண் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதிலும் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுவையில் தினமும் 3000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு […]
ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தங்க தாலி திருடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மரக்காணம் பிரம்மதேசம் எனும் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அனுமதித்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயா சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் வந்த மர்ம நபர் ஒருவர் சிகிச்சை பெற்றுவந்த ஜெயாவின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க தாலி செயினை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து […]
புதுச்சேரயில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மதிப்பு கூட்டு வரியால் டீசல் விலை குறைந்துள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுச்சேரியில் கொரோனா மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த புதிய வரியை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான புதிய மதிப்பு கூட்டு வரியை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் டீசல் லிட்டருக்கு 1.34 ரூபாய் குறைந்து 77.89 .ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது பெட்ரோல் விலையில் […]
புதுச்சேரியில் நேற்று பிறக்கப்பிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கை மக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை முதல்வர் நாராயணசாமி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஒரு சில இடங்களில் ஒரு நாள் முழு ஊரடங்கு என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே செவ்வாயான நேற்று காலை […]
புதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வெளி மாநிலத்தவர்கள் உள்ளே வர தடை இல்லை என புதுவை அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் அதிக அளவில் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. இருப்பினும், வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ பாஸ் முறையில் அனுமதி வாங்கி தான் செல்ல முடியும். இந்நிலையில், இ பாஸ் நடைமுறையை மத்திய […]
இன்று புதுச்சேரியில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழகம் முழுவதிலும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.தளர்வுகள் இல்லாத இந்த முழு ஊரடங்கு கடந்த வாரத்திலிருந்து செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து புதன்கிழமை காலை 6 மணி […]
கடந்த 6 மாத கால சம்பளம் வழங்காததால் வறுமையில் வாடிய போக்குவரத்து ஊழியர் தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான அனுமதியை கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லையாம். எனவே வறுமையில் பல சிரமங்களுக்கு உள்ளான தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான […]
உலகம் கொரோனாவிலிருந்து விடுபட மணக்குள விநாயகர் அருள் புரிவார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக முதல்வரின் அறிவுறுத்தல் படி கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். வழிபாடு […]