புதுச்சேரி

குடிநீரில் கழிவுநீர்.! 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு தீவிர சிகிச்சை.!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் நேற்று இரவு 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பதறிப்போன அக்கம் பக்கத்தினர், அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விவரம் அறிந்து, அங்கு புதுசேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இந்த திடீர் வாந்தி மயக்கம் பற்றி அவர்கள் விசாரித்துள்ளனர். இதற்கிடையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ குழு ஆய்வு […]

காரைக்கால் 2 Min Read
Default Image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லியில் இருந்து  திரும்பிய ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து  திரும்பிய […]

#Corona 2 Min Read
Default Image

புதுச்சேரியில் வரும் 14-ஆம் தேதி மழலையர் பள்ளிகள் திறப்பு..!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால், அனைத்து பள்ளி கல்லூரிகளும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வரும் மார்ச் 14-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

education 2 Min Read
Default Image

தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் – தமிழிசை

புதுவை கடற்கரை சாலையில் ஒளவையார் விழா நடைபெற்றது. இந்த விழாவை  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், வாயில் நுழையாத பெயரை பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவதாக குற்றசாட்டியதுடன், தமிழை படித்தால் தான் உயர்வு என்பதை அறிய வேண்டும். தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என  கேட்டுக்கொண்டுள்ளார்.

TAMILISAI 2 Min Read
Default Image

#Breaking:முதல் முறையாக புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி!

புதுச்சேரி:முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 578 ஆக இருந்த நிலையில்,இன்று 653 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,மீதமுள்ள 467 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில்,முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் […]

#Puducherry 4 Min Read
Default Image

இன்று முதல் பரிசோதனை…பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்!

புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆவணங்கள் இன்று முதல் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதனால்,அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகமும் தங்கள் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. […]

corona vaccine 5 Min Read
Default Image

டிசம்பர் 6 முதல் புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு …!

டிசம்பர் 6 முதல் புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார்.  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்பு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]

education minister 3 Min Read
Default Image

புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஊதிய உயர்வு..!

புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஊதியம் ரூ.951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.849-லிருந்து ரூ.951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த மாதம் முதல் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருகிறது என உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

Dshorts 1 Min Read
Default Image

#Breaking : புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் […]

#School 2 Min Read
Default Image

புதுச்சேரி : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு …!

தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு […]

colleges 2 Min Read
Default Image

புதுச்சேரியில் நாளை தொடங்கவிருந்த பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு ….!

புதுச்சேரியில் நாளை 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில், அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் […]

pondicherry 2 Min Read
Default Image

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உடனடி அமல் ….!

புதுச்சேரியில் பெட்ரோல் விலை 12.85 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  டீசல் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான கலால் வரியை குறைத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கலால் வரி குறைப்பில் இருந்து கூடுதலாக 7 ரூபாய் வாட் வரியை புதுச்சேரி அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 12.85 காசுகள் குறைந்து 94.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையில் 19 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.83.58 க்கு விற்பனை […]

#Petrol 2 Min Read
Default Image

ஊரடங்கு தளர்வு : நாளை முதல் 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி – புதுச்சேரி அரசு!

புதுச்சேரியில் நாளை 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்கும் விதமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா பரவல் குறைத்துள்ளதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் புதுச்சேரியில் இரவு நேரம் […]

coronavirus 3 Min Read
Default Image

புதுச்சேரியில் புதிதாக 642 பேருக்கு கொரோனா தொற்று..! 4 பேர் உயிரிழப்பு..!

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  4 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,648 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,516 பேருக்கு சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 642 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் 496, காரைக்காலில் 110, ஏனாம் பகுதியில் 22, மாகியில் 14 என மொத்தம் 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]

#Corona 3 Min Read
Default Image

புதுச்சேரியில் மேலும் 11 காவல் துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஏற்கனவே புதுச்சேரியில் 465 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 11 போலீசாருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் தினமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு தினமும் தொடர்ந்து கொண்டிருப்பதுடன் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. […]

#Police 3 Min Read
Default Image

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,759 பேருக்கு கொரோனா தொற்று – 29 பேர் உயிரிழப்பு..!

கொரோனாப்பரவலின் இரண்டாவது அலை புதுச்சேரியில் அதிகரிக்க  தொடங்கியுள்ளது. தினமும் இந்த உருமாறிய கொரோனாவை எண்ணி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,759 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. மேலும், 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 9,007 பேருக்கு கொரோனா பரிசோதனை இன்று புதிதாக  மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரியில் மட்டும் 1,365 பேருக்கும், காரைக்காலில் 218 பேருக்கும், யாணம் பகுதியில் 120 பேருக்கும், […]

corona deaths 3 Min Read
Default Image

திமுகவுடனான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க முடியும் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்!

புதுச்சேரியில் திமுகவுடனான கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்க்க முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக அரசுடனான புதுவை காங்கிரஸ் கூட்டணி சட்டசபை தேர்தலில் கோஷ்டி பூசல்கள் அதிகம் இருப்பதாலும், காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் பாஜகவுக்கு தாவும் நிலை இருப்பதாலும் கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என திமுக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக என்ஆர் காங்கிரஸ் – திமுக கூட்டணி அமைக்கவும் திட்டமிடுகிறது என தகவல் […]

#Congress 3 Min Read
Default Image

புத்தாண்டுக்கு புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் அனுமதி!

வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைந்து கொண்டு வந்தாலும், மீண்டும் வீரியமுள்ள கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு தற்பொழுது வரை அமலில் இருந்தாலும், மக்களுக்காக அரசு அவ்வப்போது சில […]

#Narayanasamy 4 Min Read
Default Image

பேஸ்ட்டுக்கு பதிலாக எலி விஷத்தை சாப்பிட்டு இளம்பெண் பலி .!

பல் துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக எலி விஷத்தை மாற்றி பயன்படுத்தியதால் 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கரியமணிகமில் 17 வயது சிறுமி பல் துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக எலி விஷத்தை அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.எரிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் ஜே.கல்பாந்த் . பீகாரை சேர்ந்த இவருக்கு 17 வயதான சுவாதி என்ற மகள் உள்ளது .இவர் கல்லூரியில் […]

17yearoldgirldied 4 Min Read
Default Image

கனமழையால் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது .அந்த நிலையில் சமீபத்தில் இந்த புரேவி புயலால் பெய்த மழை காரணமாக […]

HeavyRains 3 Min Read
Default Image