போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உடன் மின்துறை ஊழியர்கள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உறுதியளித்த பின்னர், இந்த பேச்சுவார்த்தையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி மின்சாரத்துறையானது, தனியாரிடம் ஒப்படைக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். கடந்த 28ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று வரை நீடித்தது. கடந்த ஞாயிற்று கிழமை புதுசேரி காவல்துறையினர் , துணை ராணுவபடையின் உதவியுடன் […]
புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். அவர்களை மண்டபத்தில் வைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர். புதுச்சேரியில் மின்சாரத்துறையை அரசு தனியார்மயமாக்கும் முடிவில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் பேச்சுவார்த்தை தொடங்கும் போதே மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதே ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அண்மையில் தனியார்மயமாக்கல் குறித்து டெண்டர் கோரப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
புதுசேரி முழுவதும் மின்தடை ஏற்படுத்தியது தவறு. அதனை செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். அத்தியாவசிய தேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டால் தேவைப்பட்டால் எஸ்மா சட்டம் பாயும். – புதுசேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி. புதுசேரியில் மின்சாரத்துறையை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் நிருபர்களிடம் பேசுகையில், ‘மின் ஊழியர்கள் செய்வது […]
புதுசேரி மின்சாரதுறை தனியார் மயமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் போராட்டம் நடத்தினர். புதுசேரி மின்சாரத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முதற்கட்ட பணிகளை தொடங்கி உள்ளது. அதற்கான வேலைகளை அரசு ஆரம்பித்ததும் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக புதுசேரி மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று புதுச்சேரியில், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக போன்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், […]
புதுசேரியில், அரசு பள்ளி மாணவிகள், இடையே வாக்குவாதம் முற்றி, பெற்றோர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. புதுசேரியில் சுப்ரமணிய பாரதியார் அரசு மேல்நிலை பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த்துள்ளது . இதன் காரணமாக அங்கு படித்து வரும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அப்போது இருந்தே இரு பள்ளி மாணவிகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்ததாக கூறப்படுகிறது.கடந்த 12ஆம் […]
புதுச்சேரியில் வேகமாகப் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் 50% அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் அருகருகில் இருக்கும் சூழலால் காய்ச்சல் பாதிப்பு உள்ளான குழந்தைகளிடமிருந்து மற்ற […]
காலதாமதமாக சிகிச்சை அளித்ததன் காரணமாக தான் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளனர். எப்போதும் அவசர சிகிச்சையில் அலட்சியம் இருக்கவே கூடாது. – இவ்வாறு புதுசேரி முதல்வர் ரங்கசாமி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காரைக்காலில் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் உயிரிழந்த சம்பவம் தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது. தன் மகளை விட அதிக மார்க் எடுத்துவிட கூடாது என பால மணிகண்டனின் சக மாணவியின் தயார் சகாயராணி விஷம் கொடுத்துள்ளார். அதன் […]
பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நிலை 1 , நிலை 2, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் நிர்வாக நேரம் போக மீதி நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகள் எடுக்க வேண்டும் என புதுசேரி பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்களாக இருந்து இந்த தலைமை பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் நிர்வாக பணிகள் அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை தவிர்த்து வருவதாக […]
காரைக்கால் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்ய புதுசேரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் சில நாட்களுக்கு முன்னர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தயார் சகாயராணி, தன் மகளை விட நன்றாக படித்து விட கூடாது என நினைத்து விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. மாணவனுக்கு விஷம் கொடுத்தது சகாயராணி தான். ஆனால், அவன் உயிரிழந்ததுக்கு காரணமாக, […]
விஷம் கொடுத்து உயிரிழந்த பள்ளி மாணவனின் உயிரிப்புக்கு அலட்சியமாக நடந்து கொண்ட அரசு மருத்துவமனையின் போக்கே காரணம் என காரைக்கால் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் என்றால் தன மகளுடன் படிக்கும் சக மாணவன் படிப்பில் தன் மகனை முந்திவிட கூடாது என சக மாணவியின் தாயார் அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்த கொலை செய்த சம்பவம் தான். இதில் தயார் சகாயராணி கைது செய்யப்பட்டு […]
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் நேற்று இரவு 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பதறிப்போன அக்கம் பக்கத்தினர், அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விவரம் அறிந்து, அங்கு புதுசேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இந்த திடீர் வாந்தி மயக்கம் பற்றி அவர்கள் விசாரித்துள்ளனர். இதற்கிடையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ குழு ஆய்வு […]
டெல்லியில் இருந்து திரும்பிய ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து திரும்பிய […]
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால், அனைத்து பள்ளி கல்லூரிகளும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வரும் மார்ச் 14-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
புதுவை கடற்கரை சாலையில் ஒளவையார் விழா நடைபெற்றது. இந்த விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், வாயில் நுழையாத பெயரை பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவதாக குற்றசாட்டியதுடன், தமிழை படித்தால் தான் உயர்வு என்பதை அறிய வேண்டும். தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரி:முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 578 ஆக இருந்த நிலையில்,இன்று 653 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,மீதமுள்ள 467 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில்,முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் […]
புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆவணங்கள் இன்று முதல் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதனால்,அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகமும் தங்கள் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. […]
டிசம்பர் 6 முதல் புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்பு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]
புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஊதியம் ரூ.951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.849-லிருந்து ரூ.951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த மாதம் முதல் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருகிறது என உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் […]
தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு […]