புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று பந்த் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மாநில அஸ்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது என முதல்வர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு மனக் குமுறலை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மாநில அஸ்தஸ்தை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்திற்கு அறிவித்திருந்தார்.த முழு அடைப்பு போராட்டத்தால் புத்தாண்டு வியாபாரம் […]
குளிர்பானத்தில் விஷம் கொடுத்து காரைக்காலில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பெயரில் கொலை வழக்கின் கீழ் இன்று காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் காரைக்கால் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கொலையாளியாக குற்றம் சுமத்தப்பட்ட சகாயராணி கொடுத்த குளிர்பானத்தில் உள்ள விஷமும், அதே போல மாணவன் உடற்கூராய்வில் உடலில் இருந்த விஷமும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி இரண்டரை மணிநேரம் தாமதமாகதான் வந்தாராம். புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சுமார் இரண்டரை மணிநேரம் முதல்வர் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். முதலில் […]