புதுச்சேரி அருகே அக்காவின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததால், கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணமானதாகக் கூறி, உயிரிழந்த பெண்னின் அக்கா கணவர் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. வில்லியனூரை அடுத்த செந்தநத்தம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, அவரது அக்காவின் கணவரான அம்பேத் என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அம்மாணவியை அம்பேத் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் அம்பேத்தின் தொல்லைகள் அதிகரித்ததால், மாணவி நேற்றிரவு […]
புதுச்சேரி வில்லியனூர் அன்னை ஆலயத்திற்கு சைக்கிளில் சென்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு தேவாலயத்தை ஆய்வு செய்தபின் அப்பகுதி மக்களுக்கு புத்தாண்டு, கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார் @thekiranbedi source: www.dinasuvadu.com
புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம், மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில், 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, தலைமைச் செயலகம் அருகே கடற்கரை ஓரமாக 200 மீட்டர் நீளத்திற்கு, கருங்கற்கள் அடுக்கப்பட்டு, பின்னர் மணலைக் கொட்டி இடம் சமன் செய்யப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட பணியாக, தடுப்புச் சுவர்கள் […]
டிச.2இல் கைதான காரைக்கால் மீனவர்கள் 10 பேரின் காவலை 2ஆவது முறையாக டிச.26 வரை நீட்டித்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.
புதுச்சேரி மாநிலத்தில் இறந்தோர், வெளிநாட்டில் உள்ளோர் பெயர்கள் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ளதாக புகார் திருமயம் அருகே உள்ள குழிபிறை ஊராட்சியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
புதுச்சேரியில் கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கக்கோரி கடலூர் சிங்காரவேலன் சிலை அருகே அனைத்து மீனவ பஞ்சாயத்து சார்பாக ஆர்ப்பாட்டம் புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினர்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மீனவர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி லட்சத்தீவில் கரை சேர்ந்த மீனவர்கள் புதுச்சேரி திரும்பிய நிலையில் 5 பேருக்கு உடல்நலக்குறைவு.
புதுச்சேரி துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.3000 கோடி வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது – முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தந்த அடிப்படையில் பணிபுரியும் (PRTC) ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் தரத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இப்போராட்டம் இன்னும் 4வது நாளாக தொடர்கிறது. மேலான் இயக்குனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட போதும் இந்த போராட்டம் தொடர்கிறது. தங்களை தினக்கூலியாக மாற்றும் வரை இப்போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.