புதுச்சேரியில் ஏடிஎம் மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் அதிமுக பிரமுகர் சந்துருஜியை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகளை முடக்க அரசு நடவடிக்கை எடுக்க அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் பலரது வங்கிக் கணக்கில் இருந்து சமீபகாலமாக பல கோடி பணம் மாயமானது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அதிமுக பிரமுகர் சந்துருஜி, என்ஆர் காங்கிரஸ் […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மேலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள் சரியான பாதையில் செல்கின்றனர் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின், காரைக்கால் மைய கணிப்பொறி துறை தலைவராக பணியாற்றிய சுரேஷ்குமார் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அவர் பேராசிரியர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி : கோவில் திருவிழாக்களில் அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கி வைக்கக்கூடாது. 10, +2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கியை பயன்படுத்தக் கூடாது என அம்மாநில இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் சிறு சிறு பைசாவாக ஏறிகொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறும் அபாயம் உருவாகி வருகிறது. இதனை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார். புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாட்டுவண்டியில் சென்று போராடினர். தலைமை தபால் நிலையம் அருகே அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாவு […]
புதுச்சேரியில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று, பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக இருந்த 5 ரூபாயினை, 7 ரூபாயாக உயர்த்தி, அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கு திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பேருந்து கட்டணங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையிலான குழு, அறிக்கை அளித்தப்பின் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு பேருந்து கட்டணங்களை திடீரென உயர்த்திய நிலையில், புதுச்சேரி அரசும் […]
திருவள்ளுவர் தினத்தையொட்டி வருகின்ற 15 ஆம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது .கள்,சாராயம் ,மதுக்கடைகள் ,பார்கள் ,மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களை மூட உத்தரவிட்ட காவல்துறை ,தடையை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது . எனவே இந்த செய்தி குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தியாகவே இருக்கும் . source: dinasuvadu.com
புதுச்சேரி அருகே அக்காவின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததால், கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணமானதாகக் கூறி, உயிரிழந்த பெண்னின் அக்கா கணவர் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. வில்லியனூரை அடுத்த செந்தநத்தம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, அவரது அக்காவின் கணவரான அம்பேத் என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அம்மாணவியை அம்பேத் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் அம்பேத்தின் தொல்லைகள் அதிகரித்ததால், மாணவி நேற்றிரவு […]
புதுச்சேரி வில்லியனூர் அன்னை ஆலயத்திற்கு சைக்கிளில் சென்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு தேவாலயத்தை ஆய்வு செய்தபின் அப்பகுதி மக்களுக்கு புத்தாண்டு, கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார் @thekiranbedi source: dinasuvadu.com
புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம், மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில், 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, தலைமைச் செயலகம் அருகே கடற்கரை ஓரமாக 200 மீட்டர் நீளத்திற்கு, கருங்கற்கள் அடுக்கப்பட்டு, பின்னர் மணலைக் கொட்டி இடம் சமன் செய்யப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட பணியாக, தடுப்புச் சுவர்கள் […]
டிச.2இல் கைதான காரைக்கால் மீனவர்கள் 10 பேரின் காவலை 2ஆவது முறையாக டிச.26 வரை நீட்டித்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.
புதுச்சேரி மாநிலத்தில் இறந்தோர், வெளிநாட்டில் உள்ளோர் பெயர்கள் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ளதாக புகார் திருமயம் அருகே உள்ள குழிபிறை ஊராட்சியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
புதுச்சேரியில் கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கக்கோரி கடலூர் சிங்காரவேலன் சிலை அருகே அனைத்து மீனவ பஞ்சாயத்து சார்பாக ஆர்ப்பாட்டம் புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினர்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மீனவர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி லட்சத்தீவில் கரை சேர்ந்த மீனவர்கள் புதுச்சேரி திரும்பிய நிலையில் 5 பேருக்கு உடல்நலக்குறைவு.
புதுச்சேரி துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.3000 கோடி வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது – முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தந்த அடிப்படையில் பணிபுரியும் (PRTC) ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் தரத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இப்போராட்டம் இன்னும் 4வது நாளாக தொடர்கிறது. மேலான் இயக்குனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட போதும் இந்த போராட்டம் தொடர்கிறது. தங்களை தினக்கூலியாக மாற்றும் வரை இப்போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.