கஜா புயல் நேற்றிரவு தமிழகத்தை தாக்கி வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க தொடக்கி தற்போது கரையை கடந்து வருகிறது.இந்நிலையில் புதுச்சேரி காரைக்காலில் உள்ள திருப்பட்டினம் பகுதில் கஜா புயலின் தாக்குதலால் கப்பல் தரைதட்டி சிக்கி உள்ளது.காரைக்கால் திருப்பப்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்களின் படகுகளை புயல் அடித்துச் சென்றதை அடுத்து அதை தேடி கடலுக்கு சென்ற மீனவர்கள் அங்கே தரை தட்டி இருந்த கப்பலை பார்த்துள்ளனர்.இந்நிலையில் அந்த கப்பலில் 10 ஊழியர்கள் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.இந்த கப்பல் புயலின் வேகத்தால் கரைக்கு அடித்து […]
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ரூபாய் நோட்டு மதிப்பு இழக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. இத்திட்டம் அறிவிக்கப் பட்டதால் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன? மக்களுக்கு பலன்கள் கிடைத்துள்ளதா? என காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகள் ஆய்வு செய்தோம். ரூபாய் மதிப்பு இழப்பு திட்டத்தால் தொழிற் சாலைகள் மூடப்பட்டன, கட்டுமானப் பணிகள், மனை விற்பனை நிறுத்தப்பட்டது. மக்கள் மத்தியில் பணப் புழக்கம் இல்லை. வேலை வாய்ப்பு குறைந்தது. முன்னாள் […]
மோசமான வானிலை காரணமாக புதுவையில் நேற்று 2-வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. புதுவையில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் இருந்து புதுவை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக புதுவையில் தரை இறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் புதுவையில் இருந்து சென்னைக்கு […]
லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புதுச்சேரியை சேர்ந்த வங்கி மேலாளர் பலியானார். திருச்சி உறையூரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 55). இவர் புதுச்சேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் மேலாளராக இருந்தார். இதற்காக கடலூர் மஞ்சக்குப்பத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். புகழேந்தி தினசரி தனது காரில், வங்கிக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம் போல், புகழேந்தி தனது காரில் மஞ்சக்குப்பத்தில் உள்ள வீட்டில் இருந்து வங்கிக்கு புறப்பட்டு சென்றார். காலை 9.30 […]
கிருமாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் பரிதாபமாகச் செத்தார். அவருடைய அண்ணன் பலத்த காயம் அடைந்தார். கிருமாம்பாக்கத்தில் புதுச்சேரி-கடலூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பத்ம நாபன், தொழில் அதிபர். இவருடைய மனைவி பத்மாவதி, கிராம பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர். இவர்களின் மகன்கள் விக்னேஷ் (வயது 19), பிரவீன்குமார் (16). விக்னேஷ், தாகூர் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். பிரவீன் குமார் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 […]
முதலியார்பேட்டையில் பெயிண்டிங் காண்டிராக்டரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுவை முதலியார்பேட்டை சுதானாநகரைச் சேர்ந்தவர் சூரி(வயது 42). கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியை ஆட்களை வைத்து செய்து வருகிறார். இவரிடம் தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த வேலு, சுரேஷ் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை சூரியை சந்தித்து வேலை ஏதாவது இருக்கிறதா? என்ற கேட்டுள்ளனர். அப்போது அவர் தற்போது மழை பெய்வதால் வேலை எதுவும் […]
புதுச்சேரி நகர பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக புதுவையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. புதுவையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு கன […]
அமைச்சர்களின் அலுவலக டீ செலவு ரூ.3 கோடியா? என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– புதுச்சேரி முதல்–அமைச்சராக நாராயணசாமி பதவியேற்றது முதல் நிதி நெருக்கடி காரணமாக மக்கள்மேல் பல்வேறு வரிகளை திணித்து வருகிறார். கடந்த 2 ஆண்டில் புதுவை சட்டமன்ற கூட்டம் 50 நாட்கள் கூட நடந்தது கிடையாது.கடந்த 2 ஆண்டில் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு […]
சொந்த கிராமத்தில் வயலில் இறங்கி தொழிலாளர்களுடன் வேளாண்மைதுறை அமைச்சர் கமலக்கண்ணன், வேலை செய்தார். இதை புதுச்சேரி கவர்னர் கிரண் பெடியும்,முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பாராட்டி உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தின் வேளாண்மைதுறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். இவருடைய சொந்த ஊர் திருநள்ளாறு அருகே உள்ள அம்பகரத்தூர் கிராமம் ஆகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த கமலக்கண்ணன், அமைச்சரான பின்னும் தனது வயலை உழுவது, நாற்று நடுவது, உரம் தெளிப்பது உள்ளிட்ட பணிகளை பார்வையிட செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் […]
புதுவையில் நிதி அதிகாரத்தை பரவலாக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் மறுப்பு தெரிவித்துள்ளார். புதுவையில் அரசு நிர்வாகம் செம்மையாகவும், விரைவாக மக்கள் பணிகளை மேற்கொள்ளவும், இயக்குனர், செயலர்கள், நிதியமைச்சர், அமைச்சரவை ஆகியவற்றுக்கு நிதி அதிகாரத்தை கூடுதலாக்கும் வகையில் நிதி அதிகாரத்தை கூடுதலாக்கி பரவலாக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்பட்டது. அதில் ஆளுநரின் பொது நிதி விதிகள் 13(3)-ல் உள்ள அதிகாரங்களை, […]
புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி காலவரையின்றி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரி போக்குவரத்து கழகம் அம்மாநிலம் மட்டும் இல்லாமல் சென்னை, நாகர்கோவில், பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்து சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. ஏற்கவே முடிவு […]
புதுச்சேரியில் நடிகர் விஜய் பங்கேற்றதிருமண விழாவில் ரசிகர்கள் கூட்டம்நெருக்கியடித்து கலாட்டாவில் ஈடுபட்டதால்மண்டப நாற்காலிகள் சூறையாடப்பட்டன.போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைஅப்புறப்படுத்தி விஜயை பத்திரமாகஅனுப்பிவைத்தனர். விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவார் என்று கூறப்பட்டதால், ஏராளமான விஜய் ரசிகர்கள் கல்யாண மண்டபத்துக்கு படையெடுத்தனர். இதனால் திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மேடையை நோக்கி முன்னேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன், […]
கருணாநிதியின் பெயரை புதுவையில் 100 ஆதி சாலை மற்றும் பைபாஸ் சாலைக்கு சூட்ட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 100 அடி சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. […]
புதுச்சேரி , பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் 2 இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.இது குறித்து கவர்னர் கிரண்பேடி தனது வாட்ஸ்-அப் பதிவில் பொதுசொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் ரோந்து சென்று சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும். எந்த இடத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் 1031 எண்ணை தொடர்பு […]
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை (10.09.2018) நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை. அதையொட்டி, புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறது ஆளும் கட்சியான காங்கிரஸ். சிறப்பான முறையில் போராட்டத்தை நடத்துவது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்ட அந்தக் […]
புதுச்சேரி: வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவைக்கு வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானார் வருகை தருகின்றனர். இவர்களில் பல இளம்பெண்கள் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து வாடகை மோட்டார் சைக்கிள்களில் ஆண் நண்பர்களுடன் நகரில் வலம் வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் பலர் ஓட்டல்களில் அறைகள் புக்கிங் செய்து தங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரு வட மாநில பெண் தனது ஆண் நண்பர்கள் 2 பேருடன் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்தார். […]
புதுச்சேரியில் போதைமருந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்த 16 வயது சிறுமிக்கும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த விக்கி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமியை தோப்புக்கு அழைத்து சென்ற விக்கி,அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார் […]
புதுச்சேரியில் போதைமருந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்த 16 வயது சிறுமிக்கும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த விக்கி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமியை தோப்புக்கு அழைத்து சென்ற விக்கி,அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார் […]
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மானியக் கோரிக்கைகள் விவாதங்கள், சர்ச்சைகள் , நாட்டின் வளர்ச்சி போன்றவை குறித்து வாதங்கள் ஏற்படுகின்றன.இதில் முக்கியமாக பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் நாராயணசாமி பதில் அளிக்கையில் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் , மதுபானம் தவிர அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர். அரசு துறைகளில் 7600 காலி […]