புதுச்சேரியில் சாரம் பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் பொம்மை படம் போட்ட குறியீடுகள் இருந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர்.வடமாநில கொள்ளை கும்பல்கள் தாங்கள் கொள்ளையடிக்கும் வீடுகளில் இது போன்று பொம்மை படம் போட்ட குறியீடுகள் வரைந்து இருக்கலாம் என மக்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர். புதுச்சேரியில் மையப்பகுதியில் அமைந்து உள்ள சாரம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மாடிவீடுகள் உள்ளன. அங்கு 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் பொம்மை படம் போட்ட குறியீடுகள் இருந்ததால் […]
புதுசேரியில் உள்ள நாவற்குளம் அன்னை வேளாங்கண்ணி நகரில் மோகன் என்றவர் வசித்து வருகிறார்.இவர் எலெக்ட்ரீசன் வேலை செய்து வருகிறார்.இவரது மகள் புதுவையில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் செல்போனை எடுத்து கொண்டு மெசேஜ் அனுப்புவது சேட் செய்வது போன்ற செயல்களை செய்து வந்துள்ளார்.இப்படி பள்ளிக்கு சென்று வந்தவுடனே செல்போனை எடுக்கிறியே என்று பலமுறை திட்டியுள்ளனர். இதை காதிலே வாங்காதவாறு தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை […]
புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் சிவராந்தம் பேட்டையை சேர்ந்தவர் தமிழரசன்.இவர் காங்கிரஸ் கட்சியில் சமூக வலைதள பொறுப்பாளராக உள்ளார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒரு நாள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.பின்னர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் கற்பமாகியுள்ளார்.இந்த சம்பவம் யாருக்கும் தெரியாதவாறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின் கருக்கலைப்பு செய்துள்ளார்.அதன் பின்பு மீண்டும் […]
தற்போது இந்த காலகட்டத்தில் மக்கள்கள் ஹோட்டல் உணவை வீட்டுக்கு வர வழைத்து சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது. அதில் சிறந்து விளங்கும் ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் நிறுவனங்கள் டெலிவரி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதிலும் அதிகமாக படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் பொறியியல் போன்ற உயர் படிப்புகளை முடித்த பல இளைஞர்கள் இந்த டெலிவரி பாய் வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில்,அந்த படித்த இளைஞர்களை இழிவானவர்களாகவும் தீண்டத்தகாத வர்களாகவும் பார்க்கும் நிலை அதிகரித்து வருகிறது. […]
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக மார்ச் 31-ம் தேதி கமல்ஹாசன் பரப்புரை ஈடுபடுகிறார்.மேலும் பரப்புரையின் போது கமல்ஹாசன் புதுச்சேரி மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடுகிறார். அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 18 -ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது […]
அதிமுக தலைமையில் பிஜேபி + பாமக கூட்டணி முடிவாகி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் புதுச்சேரியில் போட்டியிட N.R காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதிமுக அலுவலகத்தில் பேச்சவார்த்தை நடத்தி வருகின்றார். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் N.R காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் […]
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது எதிர்த்து அரசு சார்பு ஊழியர்கள் தலையில் மண்சட்டி அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி_யில் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் சாலையில் நின்று ஹெல்மட் அணியாத வாகான ஒட்டிகளை நிறுத்தி எச்சரித்தார். இந்நிலையில் ஹெல்மட் கட்டாயத்தை எதிர்த்து , புதுச்சேரியில் உள்ள கொக்கு பார்க் அருகே அரசு சார்பு ஊழியர்கள் தலையில் மண்சட்டியை அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் ஐந்து துறைகளில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று […]
புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான போட்டியில், பல்வேறு வகையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. புதுச்சேரியில் உள்ள தனியார் கிளப் சார்பில் ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்கான போட்டி நடத்தப்படுவது வழக்கம். இப்போட்டி, 5-வது ஆண்டாக தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஜூனியர், இண்டர் மீடியட், பிரடின், ஓபன் போன்ற 6 பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்சர், டாபர்மேன், ராட்வீலர், பொம்மரேனியன், பக், ராஜபாளையம் போன்ற வகைகளைச் […]
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகிறார். இன்று ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது , தமிழகத்தில் பொங்கல் இலவச பரிசு பொருட்கள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துத்தது புதுச்சேரி மாநிலத்திற்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.
ரத்தன் நிமிஸ் என்ற ஒருமாத குழந்தை நோய் தடுப்பாற்றல் குறைப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு “எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்.காரணம் அவருக்கு பிறப்பிலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்திருக்கிறது. தற்போது அவருடைய நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது.இது உடம்பின் மற்ற பாகங்களுக்கும் பரவ நேரிடும்.மேலும் இதற்கான சிகிச்சை முறையான “எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை-க்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை தேவைப்படுகிறது.ரத்தனின் குடும்பம் நடுத்தர குடும்பம் ஆகும்.பெற்றோரின் பின்னணி நடுத்தர பின்னணி ஆகும்.ஆகவே அவர்களுக்கு […]
புதுச்சேரியில் திறந்திருந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. அங்கு இளம்பெண் ஒருவர் பணம் எடுக்க வந்த போது ஏ.டி.எம் இயந்திரம் திறந்து இருந்ததால் அதிலிருந்த 4 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளார். இது தொடர்பாக வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
புதுச்சேரி அருகே லிங்காரெட்டிபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சாராய ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லிங்காரெட்டிபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சாராய ஆலை செயல்பட்டு வந்தது. நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு காரணமாக அந்த ஆலை அப்போது மூடப்பட்டது. தற்போது இந்த ஆலையை மீண்டும் செயல்படுத்த, மறைமுக ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் […]
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், புதுவை சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இது புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில், புதுச்சேரிஅரசு மறு சீராய்வு […]
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் மட்டுமல்லாமல் காவிரி நீரை நம்பியுள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளும் பாதிக்கப்படும். இதனால் மத்திய அரசு அளித்த முதற்கட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் […]
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் மட்டுமல்லாமல் காவிரி நீரை நம்பியுள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதால், மத்திய அரசு அளித்த முதற்கட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் […]
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் கையெழுத்தானது. மத்திய அரசு நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 100 நகரங்களில் செயல்படுத்த உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரிக்கு ஆயிரத்து 828 கோடி ரூபாய் என மத்திய அரசு திட்ட மதிப்பீடு செய்து, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி அரசு ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் லிமிடெட் என்ற, அரசு சார்பு நிறுவனத்தை அமைத்தது. இந்த நிறுவனம் […]
சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து, புதுச்சேரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, புதுச்சேரி பாஜக அலுலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உள்பட 100-க்கும் […]
புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கல்வீசி, கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்த வயது பெண்களும் அனுமதிப்பது குறித்த விவகாரத்தில், கேரள அரசை எதிர்த்து, புதுச்சேரி பாஜகவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக, புதுவையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள், மற்ற மாநில பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த […]
புதுச்சேரியில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் பாலகிருஷ்ணனின் வீட்டிற்குள் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஹேமலதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. […]