கனமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.12) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி : இன்று புதுச்சேரியில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.12) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஃபெஞ்சல் புயல் கரையை கடைக்கும் போது பல இடங்களில் கனமழை பெய்து புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. எனவே, மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்ட காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கன மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வியாழக்கிழமை மட்டும் (12/12/24) விடுமுறை அளிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! pic.twitter.com/O3WnDSubMJ
— Dinasuvadu (@Dinasuvadu) December 11, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025