புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்த்து கோரும் கோரிக்கை அவ்வப்போது புதுச்சேரி சட்டசபையில் எழும். அந்த கோரிக்கைகள் அப்படியே நிலுவையில் இருந்துவிடும். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மத்திய உள்துறையின் அனுமதி பெற்ற பிறகே நிறைவேற்றப்படும்.
இதுபோல மாநிலம் அல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனை நீக்கி மாநில அரசாக செயல்பட புதுச்சேரி அரசு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. கடந்த மார்ச் மாதமும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கோரும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டும். நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி அவர் மீது கண்டனங்கள் வலுத்தன.
இதனை முன்னிட்டு, இன்று தனது விளக்கத்தை தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ளார். அதில், மார்ச் மாதம் புதுச்சேரி மாநில அந்தஸ்த்து குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி தான் கிடைக்கப்பெற்றது. அதனை 23ஆம் தேதியே கையெழுத்திட்டு மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்து விட்டேன் என தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…