புதுச்சேரியை சேர்ந்த இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அவரை புதுச்சேரியில் உள்ள GEM மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞரின் வயிற்றில் பிளேடு, ஹேர் பின் மற்றும் ஊக்குகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த இளைஞர் பல நாட்களாக இவற்றை தின்னும் பழக்கம் உடையவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வயிற்றில் இருந்து மருத்துவர்கள் Endoscopyசிகிச்சை மூலம் 13 ஹேர்பின்கள், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட பொருட்களை அகற்றினர்.
இந்த சிகிச்சை அந்த இளைஞருக்கு 6 மணி நேரம் நடைபெற்றுள்ளது. சிகிச்சையின் மூலம் இந்த பொருட்கள் அவரது வயிற்றில் இருந்துஅகற்றப்பட்டது. இதனை எடுத்து மறுநாளே அவர் மருத்துவமனையில் இருந்து ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பின் அவர் வழக்கமான உணவுகளை சாப்பிட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் நாங்கள் ஒரு குழுவாக இணைந்து தான் இந்த சிகிச்சையை சிறப்பான முறையில் செய்துள்ளோம். இந்த செயல்முறை சவாலாக இருந்தாலும் மிகுந்த கவனமுடன் செய்துள்ளோம். அவரது வயிற்றில் இருந்த பொருட்கள் அனைத்துமே கூர்மையான பொருட்கள். தற்போது அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…