புதுவை முழு அடைப்பு….பேருந்து மீது கல் வீச்சு… பாஜகவினர் 10 பேர் கைது…!!
புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கல்வீசி, கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்த வயது பெண்களும் அனுமதிப்பது குறித்த விவகாரத்தில், கேரள அரசை எதிர்த்து, புதுச்சேரி பாஜகவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக, புதுவையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள், மற்ற மாநில பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின்போது, பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியின் நகர பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
dinasuvadu.com