கவர்னருடன் மீண்டும் மோதும் முதல்வர்..!!

Default Image

புதுச்சேரி ,

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.  புதுச்சேரியில் 2 இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.இது குறித்து கவர்னர் கிரண்பேடி தனது வாட்ஸ்-அப் பதிவில் பொதுசொத்துக்களை  சேதப்படுத்துவோர் மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் ரோந்து சென்று சட்டம்-  ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும். எந்த இடத்தில் அசம்பாவித சம்பவங்கள்  நடந்தாலும் 1031 எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என  கூறியிருந்தார்.

கவர்னரின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதுவை முதல்வரும் பத்திரிக்கையாளரிடம் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.அதில் அவர்

பந்த் குறித்து அதிகாரிகளுக்கு கவர்னர்  உத்தரவிட முடியாதுஎன்றும் ,  அவரது எல்லைக்குள் தான் செயல்பட வேண்டும். அவருக்கு  கருத்து இருந்தால், முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் தான் கூற முடியும்.  தனியாக உத்தரவிட முடியாது என பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். மத்திய  அரசிடம் புகாரும் செய்துள்ளோம். இதுதொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்கிறோம் என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி  கூறினார்.இந்த பேட்டியால் மீண்டும் கவர்னர் , முதல்வர் பிரச்னை அங்கே முற்றுகிறது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்