புதுச்சேரி:
வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவைக்கு வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானார் வருகை தருகின்றனர்.
இவர்களில் பல இளம்பெண்கள் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து வாடகை மோட்டார் சைக்கிள்களில் ஆண் நண்பர்களுடன் நகரில் வலம் வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் பலர் ஓட்டல்களில் அறைகள் புக்கிங் செய்து தங்கி செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஒரு வட மாநில பெண் தனது ஆண் நண்பர்கள் 2 பேருடன் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்தார். அந்த பெண் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார்.நேற்று இரவு புதுவையில் பாருடன் கூடிய ஒரு ஓட்டலில் 3 பேரும் மது அருந்தி விட்டு அங்கு நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது புதுவையை சேர்ந்த சில வாலிபர்களும் அந்த பெண்ணுடன் நடனமாடினர். அந்த நேரத்தில் புதுவையை சேர்ந்த வாலிபர்கள் அந்த பெண்ணிடம் செக்ஸ் மீறலில் ஈடுபட்டனர்.இதனை அவருடன் வந்த ஆண் நண்பர்கள் தட்டிக் கேட்ட போது, அவர்களை புதுவை வாலிபர்கள் தாக்கி விரட்டியடித்து விட்டு மீண்டும் அந்த பெண்ணை கட்டி அணைத்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறியடித்து கொண்டு ஓட்டலில் இருந்து வெளியேறி அந்த வழியாக வந்த முக்கிய பிரமுகர் ஒருவரிடம் அழுதபடி முறையிட்டார்.
இதையடுத்து அவரது அறிவுறுத்தலின்படி அந்த பெண் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் சம்பவம் நடந்த ஒட்டலுக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வடமாநில பெண்ணிடம் செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதனால் அந்த ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.
DINASUVADU
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…