ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைத்துள்ளதால் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு அனைத்து விதமான பரிவர்த்தனை மற்றும் ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது வோட்டர் ஐடியுடனும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணாக போலி அட்டைகள் கண்டு பிடிக்க முடியும் என மத்திய அறிவித்திருந்தது. டில்லியில் நிகழ்ச்சி […]
மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக, முக்கியமான துப்பு, சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும், கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிந்துள்ளதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) செப்டம்பர் 5-ஆம் தேதி பெங்களூருவில் அவரது வீட்டு வாசலிலேயே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டு சிசிடிவி-யில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. ஆனால், அவர்கள் ஹெல்மெட்அணிந்திருந்ததால் உடனடியாக அடையாளம் காண […]
புதுடில்லி : நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்ததற்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் தான் காரணம் என பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறிக்க்கொண்டிருக்கிற போது, தேசிய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த சலசலப்பு அடங்குவதற்குள் பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரியும் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த […]
புதுடில்லி : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம், பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஜூன் 30-ந் தேதிவரையும், பிறகு செப்டம்பர் 30-ந் தேதிவரையும் சேவை கட்டண விலக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், […]
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டம் திக்வாரின் நகர்கோட் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது போன்று தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது, ஆனால் அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 34வது அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம் ஹிசார்ல் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பல்வேறு மாநிலங்கலங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் மாநாட்டினை வாழ்த்தியும் மற்றும் இன்றைய இந்தியாவில் விவசாயிகள் படும் துன்பங்கள் அனைத்துக்கும் ஆட்சியாளர்கள் தான் பொறுபேற்க வேண்டும் என்று உரையாற்றினார்.
புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து, முதல் கச்சா எண்ணெய் கப்பல், இன்று இந்தியா வந்தடைகிறது. நாட்டின் தேவையில் குறிப்பிட்ட பங்கை, அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி நிறைவு செய்வதால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.1975ல் தடைஅமெரிக்காவில் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, 1975ல் தடை விதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளான, ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகியவற்றிட மிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூனில், […]
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 174 நாள்களாக நடந்துவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு எடுக்க முயற்சித்தால், போராட்டம் வேறு வடிவில் மீண்டும் தொடங்கும் என்று எச்சரித்தனர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, பிப்ரவரி 16-ஆம் தேதி இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, […]
தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தினகரன் ஆதரவாளர்கள் சேலத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேரை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காக தினகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 30 பேர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேலம் […]
தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க கேரளா மருத்துவமனைகள் மறுக்கின்றன. கேரள மருத்துவமனைகளில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. கடந்த மாதம் திருநெல்வேலியை சேர்ந்த முருகன் (30) என்பவர் கேரளாவில் கொல்லம் அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருக்கு கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. சிகிச்சை கிடைக்காததால் அவர் உயிர் இழந்தார்.இந்த சம்பவத்திற்காக கேரளா இடது முன்னணி அரசின் முதல்வர் பகிரங்க மன்னிப்பும் தமிழர்களிடம் கேட்டார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் […]
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிஎஸ்எப் முகாமிற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். மோதல்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகேயுள்ள பிஎஸ்எப் முகாம் உள்ளது. பலத்த பாதுகாப்புள்ள இங்கு, நுழைந்த பயங்கரவாதிகள், கன ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் 4 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி […]
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் அமரர் சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது. புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து […]