சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் பரோல் வழங்கியதை அடுத்து, 5 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா. சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் உயிருக்குப் போராடிவந்த நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப்பட்டார். ஆனாலு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவரைக் காண்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலா, 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூரு பரப்பன […]
சைவ உணவை சாப்பிட்டால் தான் இளைத்த உடலை பெற முடியும் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீன்கள் இனப்பெருக்கத்தால் வைகையில் நீர் மட்டம் குறைவு – அமைச்சர் செல்லூர் ராஜி டெல்லியிலிருந்து வந்த AC பஸ்களில் இருந்த கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவுகிறது – அமைச்சர் காமராஜ் மக்கள் போட்டுக் குளிக்கும் சோப்புகளால் தான் நொய்யலாற்றில் நுரை – அமைச்சர் கருப்பண்ணன் சிவாஜி சிலை மீது காக்கை எச்சம் படாமலிருக்கவே அதிமுக அரசு மணிமண்டபம் […]
“டில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகம் முன்பு அக் 16 வரை பாஜக காரர்கள் தினசரி போராட்டங்கள் நடத்துவார்கள் என்று அமித் ஷா அறிவித்திருப்பது அவரின் ரவுடித்தன அரசியலின் பிரதிபலிப்பு என்கிறது பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏடு”. ( டிஒஐ ஏடு) மிரட்டல் வேலையில் இறங்கியிருக்கி றார் அமித்ஷா. டில்லி போலிஸ் தனது கையில் இருக்கிறது எனும் மமதை யில் இப்படி துள்ளி குதிக்கிறார். இவர் குஜராத்தில் உள்துறைஅமைச்சராக இருந்த போது எத்தகைய அக்கிரமங்களில் ஈடுபட்டார் என்பதை உலகம் […]
கேரள தேவஸ்வம் போர்டு வரலாற்றில் முதல் முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த ஆறு பேரை கோவில் மேல்ஷாந்தி யாக நியமித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் உத்தரவு வழங்கியுள்ளது.. கேரளாவில் உள்ள பிரபல கோவில்களில் காலியாக இருந்த பூசாரிகள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்ட பிணராய் விஜயன் தலைமையிலான அரசு தேவசம் பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பை உருவாக்கி தேர்வு நடத்தியது.. திருவிதாங்கூர் தேவசத்தில் காலியாக இருந்த 62 பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் எந்தவொரு […]
பிகார்: பிகாரின் லலித் நாராயண் மிதிலா என்ற பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு மாணவருக்கு வழங்கிய அனுமதி அட்டையில் மாணவரின் புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையார் புகைப்படம் பதியப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பிகாரின் லலித் நாராயண் மிதிலா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் ஜே.என். கல்லூரி என பரவலாக அழைக்கப்படும், ஜக்தேஷ் நந்தன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டினில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையாரின் படம் இடம் பெற்றுள்ளது. பிள்ளையாருக்கு எப்போதுதான் பிகார் […]
புதுடில்லி : 2017 ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை போப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரியலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார்.முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.2.5 லட்சம் கோடி. கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்ப 26 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசியாவின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியின் சகோதரர் […]
சென்னை : தமிழகத்தின் 20வது கவர்னரான பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,6) பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் காலை 9.30 மணியளவில் நடந்த விழாவில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவர்னர் மாளிகையில் உள்ள கார்டனில் மேடை அமைக்கப்பட்டு, பதவியேற்பு விழா நடைபெற்றது.இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் […]
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் மீண்டும்பயணிகள் கப்பல் சேவை துவங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இலங்கை அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும்கப்பல் சேவைகள் அமைச்சர்மகிந்த சமரசிங்க இந்தசேவையை ஆரம்பிக்க அனுமதி கோரும் ஆவணங்களை முன்வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை – இந்திய சுற்றுலாப் பயணிகள் நலன் கருதிஏற்கெனவே மும்பையைச்சேர்ந்த நிறுவனமொன்றினால் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை 2011 ஜூன்மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.1200 பயணிகள் பயணிக்க கூடிய அக்கப்பல் வாரத்தில் இரு நாட்கள் சேவையில் ஈடுபட்டது. எதிர்பார்த்தவாறு […]
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதற்காக அங்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாத போதும் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தானத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து அங்கு “மக்கள் யாத்திரை”(ஜன் ரக் ஷ யாத்திரா) என்ற பெயரில் 15 நாட்கள் […]
புதுடில்லி: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார். யோசனை: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். மேலும் அவர்,ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், எங்கள் உட்பட அனைவருக்கும் இழப்பு உண்டு. ஆனால், அரசியல்சாயம் பூசி இந்த யோசனையை பார்க்க கூடாது. இதனால், அதிக பண செலவு குறைக்கப்படும் எனக்கூறியிருந்தார். தேவை என்ன? […]
சின்னமனூர்: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (27). இவரது நண்பர் தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த ராஜா (24). இருவரும் அடிக்கடி பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் சென்று வந்துள்ளனர். அப்படி செல்லும் போது உத்தமபாளையம் கோம்பையை சேர்ந்த மகாலெட்சுமியிடம் (47) சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது. கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியைச் சேர்ந்த வசந்தி (47) கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அவரும், மகாலெட்சுமியும் தோழிகள். தொழிலில் […]
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தர்பூர் மாவட்டம் பலாமுவில் நேற்று 2 சிறுமிகளை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதையடுத்து , இது வரை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று பிரியா விடை பெற்றார். தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். தமிழக கவர்னராக பன்வாரிலால் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று பிற்பகலில் அவர் சென்னை வர உள்ளார். இதனையடுத்து தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், இன்று […]
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் பாஜக தொண்டர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மொரதாபாத் மாவட்டத்தில் பாஜக தொண்டரான தீபக் என்பவரை அடையாளம் தெரியாத 3 மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஜிகாதி தீவிரவாத சூழலை ஊக்குவிக்கிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதற்காக அங்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாத போதும் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தானத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் […]
எரிபொருட்களுக்கான கலால்வரியை மத்திய அரசு நேற்றுமுன்தினம் குறைத்ததைத் தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும் குறைத்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. இதையடுத்து, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.70.88 லிருந்து, ரூ.68.38 காசுகளாகக் குறைந்தது. டீசல் விலை ரூ.59.14 லிருந்து ரூ.56.89 காசுகளாகக் குறைந்தது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.