நேற்று டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது .இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ”தான் அரசியலுக்கு வந்தது ஒரு மிகப் பெரிய விபத்து எனவும் பிரதமர் பதவிக்கு தன்னை விட பிரணாப் முகர்ஜி தான் பொருத்தமானவராய் இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படாததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன்னுடன் சுமூகமாக பிரணாப் முகர்ஜி பழகினார்” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த புத்தக வெளியீட்டு […]
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரக்கூடிய உரிமை ஜனநாயக நாட்டில் உண்டு.அதனை நமது அரசியலமைப்பு சட்டமும் நமக்கு வழங்கியுள்ளது .ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுருக்கிற அரசியல் வெற்றிடத்தை கணக்குப்போட்டு ”காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம் என்று கூறிக்கொண்டு வருவது தான் சந்தர்ப்பவாதம் என்பார்கள். குறிப்பிட்ட காலம் சாதாரணத் தொண்டனாக அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்து, அதன் பின்னரே தேர்தலில் குதித்து ஆட்சியை பிடிப்பதுதான் நியாயம்.நேற்று கட்சி ஆரம்பித்து, இன்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணுவது சரியல்ல.மக்களிடையே பிரபலம் என்பதால் மட்டுமே ஒருவர் முதல்வர் […]
புதுடில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று (13ம் தேதி) முக்கிய முடிவு எடுக்கிறது டெல்லி உச்சநீதிமன்றம். கேரளாவிலுள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி […]
டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் திபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சுழல் உருவாகி உள்ளது.
தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலய கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 25-10-2017 தேதி அன்று உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரும்புக்கு சரியான கொள்முதல் விலைக்கோரி போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பல விவசாயிகள் காயமடைந்துள்ளனர் .
அறியப்படாத நந்தன் என்னும் தலைப்பில் தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து 10.10.2017 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தேர்வை எதிர்கொண்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் .பின்பு தனது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் முன்னிலையில் மாண்புமிகு தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து முனைவர் பட்டத்துக்கான சான்றிதழைப் பெற்றார். அந்த பட்டமளிப்பு விழாவில் ஆய்வு நெறியாளர் சாம்பசிவம் உதயசூரியன்,தேர்வாளர் அ. ராமசாமி, பதிவாளர், துறைத் தலைவர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேற்று கரூர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மைத்துறை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குத் மாநில சிறுபான்மைத்துறைத் தலைவர் அஸ்லாம் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது . மேலும் இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அன்புச் சகோதரர் முகமது சக்காரியா,கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .
வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று தேர்தல் கமிஷன் ஹிமாச்சல் தேர்தல் அட்டவணையை மட்டும் அறிவித்துவிட்டு, குஜராத் தேர்தலை அறிவிக்கவில்லை. நவம்பர் 9ஆம் தேதி ஹிமாச்சலில் தேர்தல் நடை பெறும் என்றும், ஆனால், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் இது காலம் வரை 6மாத காலத்திற்குள் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் […]
“சீதையைக் கடத்தி வந்ததைத் தவிர இராவணன் எந்தத் தவறும் செய்யாதவர், அதுவும் தன் தங்கை அவமானப்படுத்தப்பட்டதற்கு பழி வாங்கத்தானேத் தவிர காமத்தால் அல்ல.” இந்தக் குரல்கள் மேலெழும்ப ஆரம்பித்திருக்கின்றன. நாசிக்கில், பழங்குடி மாணவர்களின் ஹாஸ்டலில் இந்த செப்டம்பர் 30ம் தேதி, இராவணன் போல வேடமிட்டு இருந்த மனிதரைச் சுற்றி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ”இராவண ராஜா வாழ்க, இராவண ராஜா வாழ்க” என கோஷங்கள் எழுப்பி இருக்கின்றனர். விதர்பா அருகில் இன்னொரு பழங்குடிச் சமூகத்தில் தசராவில், இராவணன் […]
டில்லியில் உள்ள பாஜக சட்டபேரவை உறுப்பினர் ஜிபேஷ் குமார் அவரது வீடு அருகில் உள்ள ரோஹினி செக்டார்-23ல் சென்று கொண்டிருந்த பொது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள்புதிய ஐஃபோன் 7 ரக மொபைலை பறித்து சென்றனர். ஜிபேஷ் குமார் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிற்றனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி .சாக்கடை வாளியுடன் கொசு வலையுடன் தெற்கு மண்டல அலுவலகத்தில் புறநகர செயலாளர் பேச்சிமுத்து தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூமயில்,புறநகர குழு உறுப்பினர் டேனியல் ,வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆனந்த்,மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர் .
இந்தியன் ரயில்வே பொதுத்துறை நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 4690 பதிவு செய்யும் லிங்: https://goo.gl/et7igJ வேலை: அனைத்து விதமான வேலைகள் பதிவு செய்ய கடைசி நாள் : 29.10.2017
கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது .ஏராளமான மாணவ,மாணவிகள், கலந்து கொண்டனர்.