செய்திகள்

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்லீப்பிங் பாட்’ (Sleeping Pod) தொடங்கப்பட்டுள்ளது. படுக்கை, குளிர்சாதனம், சார்ஜிங், Wi-Fi என சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்லீப்பிங் பாட்-க்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம், ரயிலுக்காகக் காத்திருக்கும் போது நீங்கள் நீண்ட நேரம் ஸ்டேஷனில் இருக்க நேர்ந்தாலோ, உங்களுடன் பயணிப்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டாலோ, ஹைதராபாத்தில் புதியதாக […]

#Hyderabad 5 Min Read
Sleeping pods in cherlapalli station

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நேற்று பேசியதை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் பேசுகையில் கூட பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தான் தனது கொள்கை என ஆவேசமாக பேசினார் சீமான். அப்போது தான் தவெக தலைவர் விஜய் பற்றியும் தனது அரசியல் கருத்தை முன்வைத்து பேசினார் சீமான். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஆதரவு தெரிவித்த […]

#Chennai 4 Min Read
TVK Leader Vijay - NTK Leader Seeman

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில் பக்தர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மல்லிகா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 2 லட்சம் நிவாரணமும், 6 பேர் குடும்பத்தினருக்கும் ஆந்திர அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதனையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி […]

#Roja 4 Min Read
Rose - Pawan Kalyan - Naidu

பொங்கல் தொகுப்பு பெறுபவர்களே… நாளை ரேஷன் கடைகள் செயல்படும்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில்,  முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம்  2 கோடியே 20 லட்சத்து 94ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை […]

pongal gift 4 Min Read
Ration Shop

காங்கிரஸ் vs ஆம் ஆத்மி : பரபரக்கும் டெல்லி அரசியல் களம்! இரு அணிகளாக பிரிந்த இந்தியா கூட்டணி?

டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த 2015 முதல் தொடர்ந்து 2 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வென்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி அரசியல் மாற்றங்கள்… கடந்த சில மாதங்களாக டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை வழக்கில் கைது, பிறகு ஜாமீன் , முதலமைச்சர் பதவி ராஜினாமா […]

#AAP 8 Min Read
AAP Leader Arvind Kejriwal - Congress Leaders Mallikarjun kharge and Rahul gandhi

பொங்கல் பரிசுத்தொகை : “தேர்தல் வந்தால் பார்க்கலாம்…” துரைமுருகன் பேச்சால் சலசலப்பு! 

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் இன்று அவை உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதிமுக கேள்வி : அப்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பொங்கல் பரிசுத்தொகை பற்றி கேள்வி எழுப்பினார். “அதிமுக ஆட்சியில் இருந்த போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500 கொடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ரூ.5 ஆயிரம் […]

#ADMK 5 Min Read
Pongal Gift 2025 - Minister Duraimurugan speech

நாயகன் மீண்டும் வரார்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!

டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் […]

England Cricket team 5 Min Read
Mohammed Shami

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது அடுத்தடுத்து போலீஸ் புகார்கள்…

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பெண்ணுரிமைக்காக அவர் என்ன செய்தார் என பல்வேறு சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்தார். சர்ச்சை கருத்துக்கள் : தாய்மொழி தமிழை சனியன், காட்டுமிராண்டி மொழி என கூறியவர் பெரியார். திருக்குறளை மலம் என்று கூறியவர் பெரியார். உடல் இச்சைக்கு தாய், மகள், உடன் பிறந்தவளோடு உறவு […]

#Chennai 6 Min Read
NTK Leader Seeman controversial speech about Periyar

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026 சட்டமன் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை அவர் ஆலோசனை நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், மாவட்ட […]

#Chennai 4 Min Read
TVK Vijay

இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் என்ன? புட்டு புட்டு வைத்த தலைவர் நாராயணன்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, எம்.கே-3 மற்றும் கிரயோஜெனிக் என்ஜின் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்திய விண்வெளித் துறையின் தொடர்புடைய பிரிவுகளில் […]

#ISRO 6 Min Read
isro narayanan

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு – இருமாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மல்லிகா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 2 லட்சம் நிவாரணமும், 6 பேர் குடும்பத்தினருக்கும் ஆந்திர அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தமிழக […]

#DMK 6 Min Read
andhra tamilnadu

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.  தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு […]

#NTK 9 Min Read
seeman Periyar

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4-வது நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவரை கலாய்க்கும் வகையில் துரைமுருகன் பதில் கூறி அவையை சிரிப்பலையில் ஆழ்த்தினார். கூட்டத்தொடரின் போது வேல்முருகன் ” தற்போது ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக என்னுடைய தொகுதியில் இருக்கும் உளுந்தம்பேட்டை, நெல்லி குப்பம், பன்ரொட்டி இந்த […]

#TNAssembly 4 Min Read
velmurugan mla durai murugan

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். தற்பொழுது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட […]

#DMK 5 Min Read
Tirupati Stalin

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டவுடன் நேற்று இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்பொழுது, இரவு 8 மணிக்கு உடல்நிலை சரியில்லாத பக்தரை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்துள்ளனர். இதைக்கண்ட பக்தர்கள் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றதால், 2 இடங்களில் நெரிசல் ஏற்பட்டு 1 தமிழர் உள்பட 6 பேர் பலியாகினர். திருப்பதியில் கூட்ட […]

Andhra Pradesh 3 Min Read
Tirupati

பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு  (9ஆம் தேதி) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு  வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை சைதாப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு […]

Government of Tamil Nadu 4 Min Read
pongalgift

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. நேற்று சென்னை அண்ணாபல்கலைகழக விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 2 […]

#Rajbhavan 2 Min Read
news of live

என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!

கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் “கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்று பரபரப்பட்டு வரும் தகவல்களுக்கு அதிரடியான முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், கோவாவின் வருமானம் கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமாக வந்துள்ளதாக அதற்கான புள்ளி விவரம் வெளி வந்துள்ளது. கோவா சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, ஹோட்டல்கள் முழுவதும் புக்கிங் ஆன நிலையில், புதிதாக புக்கிங் செய்ய […]

#Goa 7 Min Read
goa

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின என ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை வெளியிட்டு வருகிறது. கலிபோர்னியாவில் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையால் நிலங்கள் மிகவும் உலர்ந்துள்ளன. இந்த உலர்ந்த நிலைகள், தாவரங்கள் மற்றும் காடுகள் எளிதில் தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு இடத்தில் தீ பற்றியவுடன் மற்ற இடங்களுக்கு பரவ அங்கு ஏற்பட்ட காற்றே முக்கிய காரணமாகவும் […]

#fire 5 Min Read
california fire accident

திருப்பதி கூட்ட நெரிசல் : மன்னிப்பு கேட்ட தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு!

திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால்  இலவச டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டவுடன் நேற்று இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் அளவுக்கு அதிகமாக  அந்த பகுதியில் இரவிலே திரண்டதால் அங்கு தள்ளுமுள்ளு […]

Andhra Pradesh 6 Min Read
br naidu tirupati death